திருச்சி காவல்நிலையங்களில் தபால் வாக்கிற்கு தரப்பட்ட பணம் பறிமுதல் தொடர்பான வழக்கு... சிபிஐ விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் பரிந்துரை

Youtube Video

திருச்சி காவல்நிலையங்களில் தபால் வாக்குக்கு பணப் பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரிக்குமாறு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

 • Share this:
  திருச்சி மேற்கு தொகுதியில் தில்லை நகர், உறையூர், அரசு மருத்துவமனை, நீதிமன்றம், எடமலைப் பட்டி புதூர் மற்றும் கண்டோன்மெண்ட் ஆகிய 6 காவல்நிலையங்களில், கடந்த 27ம் தேதி போலீசாரின் தபால் வாக்கிற்கு பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் தில்லை நகர் காவல்நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 100 கவர்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

  தில்லை நகர் காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் சுகந்தி உள்ளிட்ட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 8 காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

  இந்த விவகாரம் தொடர்பாக திமுக வழக்கறிஞர் மணிவண்ண பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

  மேலும் படிக்க... தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் 10 மணிநேரம் தாமதம்...

  இதனிடையே, திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதனை தேர்தல் அல்லாத பணிக்கும், பொன்மலை சரக சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் தமிழ்மாறனை பணியிடை நீக்கம் செய்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடுமாறு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: