முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும்” - தேர்தல் ஆணையத்திற்கு விஜயகாந்த் வலியுறுத்தல்!

“பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும்” - தேர்தல் ஆணையத்திற்கு விஜயகாந்த் வலியுறுத்தல்!

விஜயகாந்த் (கோப்பு படம்)

விஜயகாந்த் (கோப்பு படம்)

தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விதிமீறல்களை தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாகவும் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தலில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருவதாக கூறியுள்ள விஜயகாந்த், பணப்பட்டுவாடா குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் அராஜக செயல்களும் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விதிமீறல்களை தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாகவும் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

வீடியோ ஆதாரத்துடன் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள விஜயகாந்த், ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் தேர்தல் எதற்கு என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

First published:

Tags: Election Commission, Erode Bypoll, Erode East Constituency, Vijayakanth