தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று தொடக்கம்!
இந்தியா முழுவதும் உரிய ஆவணங்கள் இல்லாமல் புதன்கிழமை நிலவரப்படி ரூ.377.51 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அசோக் லவாசா
- News18
- Last Updated: April 4, 2019, 11:23 AM IST
இந்திய தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா தலைமையில் இன்று தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் துவங்கியது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்திய தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் சட்டம்-ஒழுங்கு நிலைமை தொடர்பாக தமிழக காவல்துறை இயக்குநர் (டிஜிபி) உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையர்கள் நேரில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து விவாதித்து வருகின்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் தொடர்பு அலுவலர்கள் உள்ளிட்டோருடன் தேர்தல் ஆணையர்கள் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பின், காலை 11 மணியளவில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை இயக்குநர் ராஜேந்திரன் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் ஆலோசிக்கவுள்ளனர்.
Also read... வேலூரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: கமல்ஹாசன்இந்த ஆலோசனைக் கூட்டங்களின்போது, தமிழகத்தில் அதிக அளவு பணம் பறிமுதல் செய்யப்படுவது தொடர்பாகவும், பண நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபிறகு வாகன சோதனைகளின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்படும் ரொக்கப் பணம், தங்கம்-வெள்ளி போன்ற ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
ரொக்கப் பணம், ஆபரணங்கள் பறிமுதலில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இந்தியா முழுவதும் உரிய ஆவணங்கள் இல்லாமல் புதன்கிழமை நிலவரப்படி ரூ.377.51 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் மட்டும் ரூ.127.84 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலைமை, ரொக்கப் பணம் பறிமுதல் போன்ற அம்சங்கள் குறித்து தேர்தல் ஆணையம் இன்று ஆலோசிக்கவுள்ளது.
Also see...
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்திய தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் சட்டம்-ஒழுங்கு நிலைமை தொடர்பாக தமிழக காவல்துறை இயக்குநர் (டிஜிபி) உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையர்கள் நேரில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் தொடர்பு அலுவலர்கள் உள்ளிட்டோருடன் தேர்தல் ஆணையர்கள் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பின், காலை 11 மணியளவில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை இயக்குநர் ராஜேந்திரன் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் ஆலோசிக்கவுள்ளனர்.
Also read... வேலூரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: கமல்ஹாசன்இந்த ஆலோசனைக் கூட்டங்களின்போது, தமிழகத்தில் அதிக அளவு பணம் பறிமுதல் செய்யப்படுவது தொடர்பாகவும், பண நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபிறகு வாகன சோதனைகளின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்படும் ரொக்கப் பணம், தங்கம்-வெள்ளி போன்ற ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
ரொக்கப் பணம், ஆபரணங்கள் பறிமுதலில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இந்தியா முழுவதும் உரிய ஆவணங்கள் இல்லாமல் புதன்கிழமை நிலவரப்படி ரூ.377.51 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் மட்டும் ரூ.127.84 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலைமை, ரொக்கப் பணம் பறிமுதல் போன்ற அம்சங்கள் குறித்து தேர்தல் ஆணையம் இன்று ஆலோசிக்கவுள்ளது.
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.