கடந்த 26-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து, அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், அக்கட்சியினர் அளித்த புகாரின் பேரில் ராசா மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடமும் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், தனது பேச்சு முதலமைச்சரை காயப்படுத்தியதாக கருதினால், மன்னிப்பு கோருவதாக ஆ.ராசா தெரிவித்திருந்தார். இந்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து பெற்றப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம், ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் படிக்க... Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (மார்ச் 31, 2021)
அதில், அவரின் பேச்சு தேர்தல் நடத்தை விதியை மீறியது போன்று உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இன்று மாலை 6 மணிக்குள் ராசா விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில், மேற்கொண்டு எந்தவொரு ஆதாரங்களையும் பெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: A Raja, CM Edappadi Palaniswami, TN Assembly Election 2021