வாக்களிக்க வாருங்கள் - அழைப்பிதழ் அடித்து வாக்காளர்களை வரவேற்கும் தேர்தல் ஆணையம்

வாக்களிக்க வாருங்கள் - அழைப்பிதழ் அடித்து வாக்காளர்களை வரவேற்கும் தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணைய அழைப்பிதழ்

வாக்களிக்க வாருங்கள் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அழைப்பிதழ் வெளியிட்டுள்ளது.

 • Share this:
  தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மார்ச் 27-ம் தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள இந்தச்சூழலில் அதிகபட்ச வாக்குப் பதிவைக் கொண்டுவருவதற்காக தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக வழக்கமாக உள்ள வாக்குச் சாவடி எண்ணிக்கை இந்தமுறை அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு நேரம் கூடுதலாக ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 80 வயதைக் கடந்த முதியவர்களுக்கு தபால் முறையில் வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  தேர்தல் அழைப்பிதழ்


  இதன் மூலம் வாக்கு போடுபவர்களை வருகையை அதிகரிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது. அதேபோல, வாக்குப் பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தியும் நிறைய விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. வாக்காளர்களை வரவேற்று தேர்தல் ஆணையம் அழைப்பிதழை வெளியிட்டுள்ளது.

  வாக்களிக்க அழைப்பிதழ் என்று வெளியிடப்பட்டுள்ள அந்த அழைப்பிதழில், ‘அன்புடையீர், நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் பங்குனி 24-ம் தேதி 6-04-2021 செவ்வாய்க்கிழமை சுபயோக சுபதினத்தில் காலை 7 மணி முதல் 5 மணிக்குள் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம் தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச் சாவடியில் நடைபெறுவதால் வாக்காளர் பட்டியில் இடம்பெற்றுள்ளள தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனி நபர் இடைவெளியை கடைபிடித்து சுற்றும் நட்பும் சூழ வருகை தந்து, தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்யும்படி அன்புடன் அழைக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: