4 தொகுதி இடைத்தேர்தலில் நடுவிரலில் மை வைக்கப்படும்: தேர்தல் ஆணையம்!

ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4  சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

4 தொகுதி இடைத்தேர்தலில் நடுவிரலில் மை வைக்கப்படும்: தேர்தல் ஆணையம்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: April 13, 2019, 5:36 PM IST
  • Share this:
மக்களவைத் தேர்தலை அடுத்து இரண்டாவது முறையாக மக்கள் வாக்களிப்பதால் 4 தொகுதி இடைத்தேர்தலில் நடுவிரலில் மை வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எஞ்சிய 4 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், முடிவுகள் மக்களவைத் தேர்தல் முடிவுகளுடன் மே 23-ம் தேதி வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4  சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த 4 தொகுதிகளுக்குட்பட்ட வாக்காளர்கள், வரும் 18-ம் தேதி நடைபெறும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளதால் குளறுபடிகளை தவிர்ப்பதற்காக நடுவிரலில் மையக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்