வாக்காளர் வைபோகம்... அன்பளிப்பு பெறுவதும் அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெருங்குற்றம்: தேர்தல் ஆணையம் அழைப்பிதழ்

வாக்காளர் வைபோகம்... அன்பளிப்பு பெறுவதும் அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெருங்குற்றம்: தேர்தல் ஆணையம் அழைப்பிதழ்

அழைப்பிதழ் பேனர்

பதாகைகள் மட்டுமின்றி துண்டு பிரசுரமாகவும் விநியோகம் செய்து வருகின்றனர். வித்தியாசமான இந்த விளம்பரம் நிச்சயம் வாக்காளிக்கும் ஆர்வத்தை தூண்டும்.

  • Share this:
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் திருமண அழைப்பிதழ் போல், வாக்களிக்க அழைப்பு விடுத்து தேர்தல் ஆணையம் செய்துள்ள விளம்பரம் பலரையும் ஈர்த்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆண்கள் 3  கோடி 8 லட்சத்து 38 ஆயிரத்து 463, பெண்கள் 3, கோடி 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 246 பேர் என 6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணியில் மொத்தம் 4.79 பேரும் 88,937 வாக்குச்சாவடிகள், 76 வாக்கு எண்ணிக்கை மையங்கள் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தேர்தலிலும் 100% வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், மூத்த குடிமக்கள், தேர்தல் காலத்தில் பணியில் உள்ள செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கும் இந்த தேர்தலில் தபால் வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

கொரோனா காலம் என்பதால் வழக்கத்தை விட கூடுதல் வாக்குச் சாவடிகளையும் அமைக்கின்றனர். இதையடுத்து தேர்தல் பணியில் கூடுதலாக ஊழியர்கள் ஈடுபடுத்த உள்ளனர். இந்த தேர்தலிலும் வாக்களிப்போர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், தொகுதிகள் தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.  விழிப்புணர்வு விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. திரைக்கலைஞர்களைக் கொண்டு விழிப்புணர்வு பாடலையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் ஆணையம் செய்துள்ள விளம்பரம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வாக்களிக்க அழைப்பிதழ் என்று, திருமண அழைப்பிதழ் போல் அச்சிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம். நாள் 06.04.2021, தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவரும், தனி நபர் இடைவெளியைப் பின்பற்றி, தங்கள் சுற்றம் சூழ வருகை தந்து தங்களது வாக்கினை பதிவு செய்யும்படி அன்புடன் அழைக்கின்றோம். வாருங்கள் வாக்களிப்போம். என்றும் குறிப்பாக, அன்பளிப்பு பெறுவதும் அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெருங்குற்றம் என்றும் தெரிவித்துள்ளனர். மேல் விபரங்களுக்கு எண் 1950 ஐ தொடர்பு கொள்ளவும் என்றும் தெரிவித்துள்ளனர்.இது போன்ற பதாகைகள் ஸ்ரீரங்கம் தொகுதியில் பல்வேறு இடங்களில் வைத்துள்ளனர். குறிப்பாக, ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம் அருகே வைக்கப்பட்டுள்ள பதாகை பிற மாவட்ட பக்தர்களை, இல்ல வாக்காளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Must Read : தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்ற கமலுக்கு காத்திருந்த ஷாக்... பரப்புரையை ரத்து செய்து ரிட்டர்ன்

பதாகைகள் மட்டுமின்றி துண்டு பிரசுரமாகவும் விநியோகம் செய்து வருகின்றனர். வித்தியாசமான இந்த விளம்பரம் நிச்சயம் வாக்காளிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளதாக கூறுகின்றனர்.
Published by:Suresh V
First published: