மாம்பழ சின்னத்தில் போட்டியிட பாமகவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

மாம்பழ சின்னம்

234 தொகுதிகளிலும் மாம்பழ சின்னத்தில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடலாம்...

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் மாம்பழ சின்னத்தில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடலாம் என தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

  ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 29 நாட்களே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

  அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை ஏற்றுள்ள பாமக தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை அதிமுகவிடம் கொடுத்துள்ளது.

  அத்துடன் அனைவருக்கும் இலவச கல்வி என்பது உள்ளிட்ட கவர்சிகரமான தேர்தல் அறிக்கையை, நேற்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார்.

  Must Read : அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது முக்குலத்தோர் புலிப்படை - கருணாஸ் காரசார பேட்டி

   

  இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் மாம்பழ சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் தற்போது அனுமதி அளித்துள்ளதால், பாமக தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
  Published by:Suresh V
  First published: