"நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்" என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
பிரான்ஸ் உடனான ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக மத்திய பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், "நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்" என்ற பெயரிலான புத்தகத்தை இன்று மாலை வெளியிடுவதாக பாரதி புத்தகாலயம் அறிவித்தது.
இந்த புத்தகத்தை பத்திரிகையாளரும், இந்து குழுமத்தின் தலைவருமான என்.ராம் வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் புத்தகத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மேலும், புத்தக வெளியீட்டு விழாவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 146 புத்தகங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் புத்தகங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், புத்தகம் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்று பாரதி பதிப்பகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் அந்த புத்தகத்தின் பிடிஎஃப் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
மேலும், மக்களவைத் தேர்தலை முன்வைத்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சித்தரித்தும், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படங்களும் வெளிவரும் நிலையில், ரபேல் பேர ஒப்பந்தம் குறித்த புத்தக வெளியீட்டுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.