தொடர் விடுமுறையால் நேற்று முன்தினம் மட்டும் ரூ.215 கோடிக்கு மேல் மது விற்பனை!

தமிழகத்தில் நேற்று முதல் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூடுவதாக அரசு அறிவித்திருந்தது.

news18
Updated: April 17, 2019, 10:50 AM IST
தொடர் விடுமுறையால் நேற்று முன்தினம் மட்டும் ரூ.215 கோடிக்கு மேல் மது விற்பனை!
டாஸ்மாக்
news18
Updated: April 17, 2019, 10:50 AM IST
தேர்தலையொட்டி நேற்று மதுக்கடைகளுக்கு தொடர் விடுமுறை அறிவித்த நிலையில் நேற்று பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சம் மதிப்பிலான 742 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் நேற்று முதல் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூடுவதாக அரசு அறிவித்திருந்தது.

கள்ளச்சந்தையில் மது விற்பவர்கள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கொண்டனர். நேற்று முன் தினம் ஒரே நாளில் தமிழகத்தில் மது விற்பனை 215 கோடி ரூபாயை தாண்டியது.


இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செந்தாமரை மற்றும் நேரு நகரை சேர்ந்த சின்னதாய் ஆகிய இருவரும் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையெடுத்து அங்கு சென்ற ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் அங்கு மறைத்து வைத்திருந்த 742 மது பாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்த பாட்டில்களின் மதிப்பு சுமார் ஒரு லட்ச ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.

Also Watch : ஓட்டுப்போட சொந்த ஊர் புறப்பட்ட மக்கள்! கோயம்பேட்டில் கூட்டம்

Loading...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...