அமமுக-வுக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு... மக்கள் நீதி மய்யத்துக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் பயன்படுத்த அனுமதி

அமமுக-வுக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு... மக்கள் நீதி மய்யத்துக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் பயன்படுத்த அனுமதி

தேர்தல் ஆணையம்

சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக-வுக்கு பிரசர் குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மக்கள் நீதி மய்யத்துக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு பொது சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அமமுக-வுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிரசர் குக்கர் சின்னத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரும்பு விவசாயி சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

  மேலும், தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரத்தையும், அகில இந்திய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு மின்கம்பத்தையும் சின்னமாக பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் கிடைக்காததற்கு தாமதமாக விண்ணப்பித்ததே காரணம் என்று கூறப்படுகிறது. டார்ச் லைட் சின்னத்தை முன்னிறுத்தி, கமல்ஹாசன் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், வேறு சின்னம் கோரி, தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

  மேலும் படிக்க...எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 47 பேர் கைது...

  மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கப்படாததற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் நேற்று கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் பிரசாரம் செய்த அவர், டார்ச் லைட் சின்னம் மறுக்கப்பட்டால், கலங்கரை விளக்கத்தை வாங்குவோம் என சூளுரைத்தார். சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைப்பதாகவும் கமல் சாடினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: