விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னம் ஒதுக்கியுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 6 தொகுதியில் போட்டியிடுகிறது. ஆறு தொகுதியிலும் தனிச் சின்னத்தில் போட்டியிடப்போவதாக திருமாவளவன் அறிவித்தார்.

  விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் சிந்தனைச் செல்வன், வானூர் தொகுதியில் வன்னியரசு, நாகப்பட்டினம் தொகுதியில் ஆளூர் ஷா நவாஸ், செய்யூர் தொகுதியில் பனையூர் பாபு, திருப்போரூர் தொகுதியில் எஸ்.எஸ்.பாலாஜி, அரக்கோணம் தொகுதியில் கவுதம சன்னா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

  விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தனிச்சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தனர். இந்தநிலையில், அவர்களுக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னம் ஒதுக்கியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: