முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம்: ஓபிஎஸ் அணியினர் எந்த கட்சி சார்பில் பங்கேற்றார்கள் என்று தெரியவில்லை: ஜெயக்குமார்

தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம்: ஓபிஎஸ் அணியினர் எந்த கட்சி சார்பில் பங்கேற்றார்கள் என்று தெரியவில்லை: ஜெயக்குமார்

ஜெயகுமார்

ஜெயகுமார்

கோவை செல்வராஜ் அமர்ந்திருப்பதை கவனித்த ஜெயக்குமார், அவருக்கு முன்பாக மேசையில் இருந்த அதிமுக பெயர் பலகையை தன் பக்கம் நகர்த்தி வைத்துக் கொண்டார்.

  • 1-MIN READ
  • Last Updated :

தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எந்த கட்சி சார்பில் பங்கேற்றார்கள் என்றே தெரியவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உட்பட ஒன்பது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும், ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் கோவை செல்வராஜும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், 15 நிமிடங்கள் முன்னதாகவே கோவை செல்வராஜ் கூட்ட அரங்குக்கு வந்து அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டார்.

அதன்பிறகு ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கோவை செல்வராஜ் அமர்ந்திருப்பதை கவனித்த ஜெயக்குமார், அவருக்கு முன்பாக மேசையில் இருந்த அதிமுக பெயர் பலகையை தன் பக்கம் நகர்த்தி வைத்துக் கொண்டார்.

அதன்பிறகு தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு அதிமுக உட்னபடுவதாகக் கூறினார். மேலும், அதிமுக என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி தான் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, Jayakumar, OPS - EPS