முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை

  • Last Updated :

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.

ஏப்ரல் இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் எனும் எதிர்பார்ப்பு இருந்துவரும் நிலையில்,  தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது வாக்குச்சாவடிகளைக் கண்டறிதல், வரும் 14-ம் தேதி வெளியிடப்பட உள்ள ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலை சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்குவது, உரிய காலத்திற்குள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

மேலும்,  அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு கணக்குகளைப் பெற்று சரிபார்க்கவும், தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் தேர்தல் தொடர்பான புள்ளி விவரங்களைப் பதிவேற்றம் செய்வது குறித்தும் அவர் அறிவுரைகளை வழங்கினார்.

Also see:

top videos

    First published:

    Tags: Local Body Election 2019