தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பரமக்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் போஸ்டர்

தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்

வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து வாக்களிப்பதை புறக்கணிப்பதாக தீர்மானம்...

 • Share this:
  பரமக்குடியில் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக நகர் முழுவதும் கமுதக்குடி கிராம மக்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி கிராமத்தில் மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை மாற்றத்திற்கு பிறகு  கமுதக்குடியில் அமைந்துள்ள ரயில்வே கேட் பாதையை ரயில்வே துறையினர் மூடியதால் கிராம மக்கள் மேம்பாலத்தில் ஏறி ஐந்து கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

  இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், இறந்த சடலங்கள், பஞ்சுமில் தொழிலாளர்கள், தானிய குடோனுக்கு வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் மிகுந்த சிரமம் அடைந்துள்ளது. இதனை கருத்தில்கொண்டு கடந்த மூன்று வருடங்களாக ரயில்வேகேட் பாதையை திறக்க வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகளிடம்  கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த ஒரு பலனும் அளிக்கவில்லை.

  ஆகையால், சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்பாக ரயில்வே கேட் பாதையை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் திறக்க முன்வரவேண்டும் இல்லை என்றால் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து வாக்களிப்பதை புறக்கணிப்பதாக கிராம மக்கள் ஒன்று கூடி தீர்மானம் எடுத்து கிராமத்தில் மக்கள் அனைவரும் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

  Must Read :  ‘3 பைகளில் கொண்டு சென்றது என்ன?’ கடம்பூர் ராஜுவிற்கு எதிரான வீடியோ ஆதாரம் உள்ளது - டிடிவி தினகரன்

   

  மேலும், வாக்கு கேட்டு எந்த அரசியல் கட்சியினரயும் ஊருக்குள் வர விடமாட்டோம் என்று தெரிவித்தனர். இதனையடுத்து பரமக்குடி நகர் முழுவதும் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர் இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: