வாக்களிப்பது எனது உரிமை : சமையல் எரிவாயு சிலிண்டர் மூலம் விழிப்புணர்வு!

வாக்களிப்பது எனது உரிமை : சமையல் எரிவாயு சிலிண்டர் மூலம் விழிப்புணர்வு!

சிலிண்டர் மூலம் விழிப்புணர்வு

சட்டமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்

 • Share this:
  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில், வாக்களிப்பது எனது உரிமை, எனது கடமை என்ற வாசகம் அடங்கிய துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டு விநியோகம் செய்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகின்றது.

  ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற, தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட தரங்கம்பாடி தாலுக்காவில் சமையைல் எரிவாயு சிலிண்டர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

  மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் நாயர் உத்தரவின் பேரில்  இந்த துண்டு பிரசுரங்கள்  சிலிண்டர்களில் ஒட்டப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறன.  இதனை தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு, எரிவாயு குடோன்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தனி வருவாய் அலுவலர் ஜோசப் மறியராஜ், வட்ட பொறியாளர் ஐயப்பன் ஆகியோரும் உடன் இருந்தனர்.  சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீத வாக்கு பதிவை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

  Must Read : அமமுகவுடன் தேமுதிக ரகசிய பேச்சுவார்த்தை?: 50 சீட் கேட்பதாக தகவல்

   

  மாணவர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என பல்வேறு  பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில், சிலிண்டர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த முயற்சி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
  Published by:Suresh V
  First published: