ELECTION 2021 TN ASSEMBLY ELECTION 2021 TO DEFEAT DMK EVERYBODY MUST PRAY TO LORD MURUGA MUT
திமுக-வை தோற்கடிக்க கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்: இந்து தமிழர் கட்சித் தலைவர் வேண்டுகோள்
ராம ரவிக்குமார்.
Election 2021, TN Assembly Election 2021 | வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக-வைத் தோற்கடிக்க அனைவரும் வழிபாடு நடத்த வேண்டும் என்று இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக-வைத் தோற்கடிக்க அனைவரும் வழிபாடு நடத்த வேண்டும் என்று இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது, இதனையடுத்து வேட்பாளர்கள் கடும் பிரயத்தனங்களுடன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தோசை வார்த்துக் கொடுக்கின்றனர், ஆம்லெட் போட்டுத் தருகின்றனர், மீன் வறுத்துக் கொடுக்கின்றனர், வீடு வீடாகப் போய் துணி துவைத்து, மாவாட்டி, பத்து பாத்திரம் மட்டும்தான் விளக்கிக் கொடுக்கவில்லை இன்னும்.
இது ஒரு புறமிருக்க இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார், பங்குனி உத்திரம் அன்று மாலை, ஹிந்து தமிழர்கள் அனைவரும், சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைய வேண்டி விளக்கேற்றி, கந்த சஷ்டி பாராயணம் செய்ய வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும், 28ம் தேதி பங்குனி உத்திரம். அன்று மாலை, 6:00 மணிக்கு, ஹிந்து தமிழர்கள் அனைவரும், தங்கள் குடும்பத்துடன், வீட்டில் அமர்ந்து வழிபாடு நடத்த வேண்டும். ஹிந்து தெய்வங்களை இழிவுப்படுத்தியோர்; ஆண்டாள் தாயை, திருப்பதி பெருமாளை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை கேவலமாகப் பேசியவர்கள்.
தாலி அறுப்பு நிகழ்ச்சி நடத்தியவர்கள்; விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாதவர்கள்; ஹிந்து கோவில்களை உடைத்து, புத்தர் கோவில்களாக மாற்றுவோம் என சொன்னவர்கள், சட்டசபை தேர்தலில் தோற்க வேண்டும்.கருப்பர் கூட்டம், தி.க., போன்ற இயக்கங்களை வளர்க்கும், தி.மு.க., தலைமையிலான கூட்டணி, தோல்வி அடைய வேண்டும். இதற்காக, வீட்டில் வேல் அல்லது முருகன் படம் வைத்து, குடும்பத்துடன் விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும்.
'முருகா... முருகா...' என, முருக நாம ஜெபம் செய்ய வேண்டும்.நம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன், ஊரில் விளக்கேற்றி செய்யும் கூட்டு பிரார்த்தனை, ஹிந்து விரோதி களுக்கு, இந்த தேர்தலில் தக்க தண்டனையை வழங்கும்.” என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 177 தொகுதிகளை கைப்பற்றும் என டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் மார்ச் 17 முதல் 22ம் தேதி வரை 80709 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதில் திமுக கூட்டணி 177 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி 49 இடங்களை கைப்பற்றும் எனவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுகவிற்கு தலா 3 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சியினர் இரண்டு இடங்களில் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது