• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கணிப்புகள் ஊக்கம் தந்தாலும் மக்கள் அளிக்கும் வாக்குகளே வெற்றியைத் தரும்: ஸ்டாலின்

கணிப்புகள் ஊக்கம் தந்தாலும் மக்கள் அளிக்கும் வாக்குகளே வெற்றியைத் தரும்: ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், ஓட்டுகளே வெற்றியை தரும். சிறுதுளிகள் பெருகிச் சேர்ந்து, கடலாவது போல, ஒவ்வொரு ஓட்டும் கவனமாகச் சேகரிக்கப்படும் போது, வெற்றியின் அளவு, வரலாறு காணாத வகையில் உயர்ந்திடும்.

  • Share this:
    திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் நம் உழைப்பில் எந்தவித தொய்வும் ஏற்பட்டு விடக்கூடாது என்று உற்சாகப்படுத்தி எழுதியுள்ளார்.

    தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏப்ரல் 6ம் தேதி 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கவுள்ளது, இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. வேட்பாளர்கள் நூதனமான முறைகளில் வாக்குச் சேகரித்து ஊடகங்களுக்கும் மீம் பிரியர்களுக்கும் போஷாக்கு அளித்து வருகின்றனர்.

    கணிப்புகள் திமுகக் கூட்டணி வெற்றி பெறும் என்று கூறுவது மற்ற கட்சிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் கணிப்புகள் ஊக்கம் தந்தாலும் மக்களின் வாக்குகளே வெற்றியைத் தரும் என்று ஸ்டாலின் கடிதத்தில் கூறியுள்ளார்.

    அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

    திமுகவுக்கு பெரும் ஆதரவான மக்களின் மனநிலை அலையாக அல்ல பேரலையாக உருவெடுத்து எழுந்து கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து தமிழகத்தை அனைத்து முனைகளிலும் பாழ்படுத்திய அதிமுக-வை இந்தப் பேரலை சுருட்டி தூர எறிந்து விடும் என்பதை தமிழக மக்கள் எல்லா இடங்களிலும் கட்சிக்கு அளித்துவரும் கணிசமான ஆதரவின் வாயிலாக உறுதிப்படுத்துகின்றனர்.

    மக்கள்தான் வெற்றியைத் தர தயாராக இருக்கின்றனரே என்ற அதீத எண்ணம் மனதில் கடுகளவு குடியேறினாலும் அது களத்தில் மலையளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும். வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வந்து சேர்க்கிற நாள் வரையிலும் நம் உழைப்பில், கவனத்தில், ஒரு சிறு தொய்வும் ஏற்பட்டு விடக்கூடாது.கடந்த சட்டசபை தேர்தலில், வெறும், ௧.௧ சதவீத ஓட்டுகள் வித்தியாசத்தில் தான், வெற்றி கைநழுவி போனது.

    ஒரு சில தொகுதிகளில் இருந்த அலட்சியம் காரணமாக, தமிழகம், அடிமை ஆட்சியாளர்களிடம் சிக்கி பாழ்பட்டு கிடக்கிறது. எனவே, கருத்து கணிப்புகள் தரும் உற்சாகத்தை விட, உழைப்பின் வாயிலாக சேகரித்து செலுத்தப்படும் ஒவ்வொரு ஓட்டும் தான், உண்மையான உற்சாகத்தை, மே ௨ம் தேதி வழங்கிடும். அதற்கேற்பட அயராது, எதையும் அலட்சியம் செய்யாது பணியாற்ற வேண்டும்.

    கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், ஓட்டுகளே வெற்றியை தரும். சிறுதுளிகள் பெருகிச் சேர்ந்து, கடலாவது போல, ஒவ்வொரு ஓட்டும் கவனமாகச் சேகரிக்கப்படும் போது, வெற்றியின் அளவு, வரலாறு காணாத வகையில் உயர்ந்திடும்.

    இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் ஸ்டாலின்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: