கடந்த சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் ‘கன்டெய்னர்’ லாரியில் ரூ.570 கோடி பிடிப்பட்டது.. இது யாருடையது? விடை இல்லை: திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி

கடந்த சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் ‘கன்டெய்னர்’ லாரியில் ரூ.570 கோடி பிடிப்பட்டது.. இது யாருடையது? விடை இல்லை: திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி

ஆர்.எஸ்.பாரதி

சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா செய்யப்பட்டது, கையும் களவுமாக பிடிப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, கூட்டம் கூட்டி, எங்களிடம் கருத்து கேட்பதை விட, ஏற்கனவே நடந்த தவறுகள் நடக்காமலிருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்

 • Share this:
  தேர்தல் ஆணையம் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகளே ‘தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடாவைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்று கூறினார்கள். இதில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

  இதில் திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கூறும்போது, “ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடாவை ஆரம்பித்து விட்டனர். கடந்த சட்டசபைத் தேர்தல் நேரத்தில் ரூ.570 கோடி கன்டெய்னர் லாரியில் பிடிபட்டது. அந்தப் பணம் யாருடையது, எங்கிருந்து வந்தது என்பதற்கு இன்று வரை விடையில்லை.

  சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா செய்யப்பட்டது, கையும் களவுமாக பிடிப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, கூட்டம் கூட்டி, எங்களிடம் கருத்து கேட்பதை விட, ஏற்கனவே நடந்த தவறுகள் நடக்காமலிருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

  அரசு அதிகாரிகள், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பின், முன்தேதியிட்டு மாற்றப்படுகின்றனர். இது, தடுத்து நிறுத்தப்பட வேண்டும். 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, தபால் ஓட்டு என்பது, சந்தேகத்திற்குரியதாக உள்ளது. இந்த முறையை நீக்க வேண்டும்.

  நிறைவேற்ற முடியாத திட்டங்களை, 27ம் தேதி, முதல்வர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்புக்கு, கவர்னர் ஒப்புதல் கொடுத்துள்ளார். இது, மிகப்பெரிய மோசடி. தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ஓட்டு எண்ணிக்கையை தாமதப்படுத்துவது அர்த்தமற்றது. அந்தந்த சட்டசபை தொகுதியில், ஓட்டுகளை எண்ண வேண்டும் என்று கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
  Published by:Muthukumar
  First published: