நான் விமானத்தில் பறப்பதே வேட்பாளர்களுக்குப் பல்லக்குத் தூக்கத்தான் - கமல் பேச்சு

கமல்ஹாசன்

நான் விமானத்தில் பறப்பதே வேட்பாளர்களுக்கு பல்லக்குத் தூக்கத்தான் என்று கமல் பேசியுள்ளார்.

 • Share this:
  நான் விமானத்தில் பறப்பதே வேட்பாளர்களுக்கு பல்லக்குத் தூக்கத்தான் என்று கமல் பேசியுள்ளார்.

  தமிழகம், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

  இதற்காக தனி விமானத்தில் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ராஜ்பவன் இருக்கும் தொகுதி, மணக்குளம் விநாயகர் கோயில் தெருவில் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

  அப்போது கமல்ஹாசன் பேசியதாவது:

  மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் புதுச்சேரி அரசியல் புதுப்பொலிவு பெறும். எங்களின் வேட்பாளர்கள் மக்களில் ஒருவராக இருப்பார்கள். இவர்கள் புதுச்சேரியை புதுப்பிக்கும் வீரர்கள்.

  நான் விமானத்தில் பறப்பதை சிலர் கிண்டல் செய்கின்றனர். நான் விமானத்தில் பறப்பதே வேட்பாளர்களுக்குப் பல்லக்குத் தூக்கத்தான். மக்களின் பல்லக்கு என் தோளில் இருக்கிறது.

  அதைத் தோளில் தூக்கி சுமக்க வந்துள்ளேன். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்க வந்தவர்கள் இல்லை. மக்கள் சேவகர்கள். அவர்களிடம் சேவை பெறும் உரிமை உங்களுக்கு இருக்கிறது.

  எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் செலவு செய்த விபரத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

  என்றார் கமல்ஹாசன்.

  முன்னதாக, பாஜக வேட்பாளர் வானதியை எதிர்த்து போட்டியிடும் கமல்ஹாசன், அவருடன் மக்கள் பிரச்சினைகள் குறித்து நேரடியாக விவாதிக்குமாறு வானதிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால் விடுத்தார்.

  மக்கள் நீதி மய்யம் சார்பில் பதில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கமல்ஹாசன் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் விவாதிக்க விரும்புவதாகவும், வானதி சீனிவாசன் போன்ற துக்கடா அரசியல்வாதியுடன் விவாதிக்க மக்கள் நீதி மய்யத்தின் மாணவரணியே போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளராக பி.டி.செல்வகுமார் போட்டியிடுகிறார்.

  இவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர் கமல்ஹாசன் நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொட்டாரம் பொட்டல்குளத்தில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் வந்திறங்குகிறார் கமல்ஹாசன்.
  Published by:Muthukumar
  First published: