மோடியும் பழனிசாமியும் தமிழக நலனில் உறுதியாக உள்ளனர்: பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி

மோடியும் பழனிசாமியும் தமிழக நலனில் உறுதியாக உள்ளனர்: பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி

சி.டி.ரவி

பிரதமர் மோடியும், முதல்வர் இ.பி.எஸ்.,சும், தமிழக நலனில் உறுதியாக உள்ளனர். ஸ்டாலினோ, அவரின் மகன் உதயநிதியின் எதிர்காலத்தில் மட்டுமே உறுதியாக உள்ளார்' என, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பிரதமர் மோடியும், முதல்வர் இ.பி.எஸ்.,சும், தமிழக நலனில் உறுதியாக உள்ளனர். ஸ்டாலினோ, அவரின் மகன் உதயநிதியின் எதிர்காலத்தில் மட்டுமே உறுதியாக உள்ளார்' என, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்த, அவரது ட்விட்டர் பதிவில், “தமிழ் மக்களே, பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் இ.பி.எஸ்.,சும், தமிழக நலனில் உறுதியாக உள்ளனர். தி.மு.க.,வின் உரிமையாளர் ஸ்டாலின், உதயநிதியின் எதிர்காலத்தில் மட்டுமே உறுதியாக உள்ளார். தேர்வு உங்களுடையது. தி.மு.க., - எம்.பி.ராசா, முதல்வர் இ.பி.எஸ்.,சின் தாயை தவறாக பேசி, தமிழ் பெண்களை அவமதித்தார்.

  இது, எதிர் கட்சியில் இருக்கும் போது, தி.மு.க.,வின் ஆணவம். குண்டர்கள் ஆட்சிக்கு வந்து, பெண்களை துஷ்பிரயோகம் செய்ய விரும்புகிறீர்களா... தேசிய ஜனநயாக கூட்டணிக்கு ஓட்டளிக்கவும்” என்று சி.டி.ரவி பதிவிட்டு உள்ளார்.

  இதற்கிடையே, தோல்வி பயத்தில் ஆளுங்கட்சி கூட்டணி, 'தி.மு.க., செய்த அக்கிரமங்கள்' என, நாளிதழ்களில் பக்கம், பக்கமாக, செய்தி வடிவில் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது என, ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும், தன் மகன் உதயநிதியை ஆதரித்து, ஸ்டாலின் பேசினார், அப்போது தொகுதி மக்கள் என்னை கேள்வி கேட்பார்கள் என்பதால், இங்கே பிரசாரம் செய்ய வந்தேன். இந்த தொகுதியில், கருணாநிதி, அன்பழகன், ஜெ.அன்பழகன் ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்களை போல கருணாநிதியின் பேரன், உதயநிதி இங்கு வேட்பாளராக போட்டியிடுகிறார். நாளிதழ்கள், ஊடகங்களில் வரும் கருத்து கணிப்புகளை பார்த்து, தோல்வி பயத்தில், ஆளும் கட்சி கூட்டணி பல்வேறு நாளிதழ்களில், விளம்பரம் வெளியிட்டுள்ளது.

  அந்த விளம்பரத்தில், தி.மு.க., ஆட்சியில் நடந்த நில ஆக்கிரமிப்பு,கடை உடைப்பு போன்ற அக்கிரமங்கள் என, செய்தி போல தயாரித்து, விளம்பர வடிவில் வெளியிட்டுள்ளனர்.இதை படிப்பவர்கள், அந்த சம்பவங்கள் இன்று, நடந்ததாக நினைப்பார்கள். அவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.கடந்த, 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., தான் ஆட்சியில் இருந்தது. அந்த சம்பவங்களில் உண்மை இருந்தால், ஏன் வழக்கு பதிவு செய்து, அதை நிருபிக்கவில்லை.

  தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் விளம்பரம் கொடுத்து, மக்களை குழப்ப நினைக்கிறார்கள். அவர்கள் கனவு நிறைவேறாது என்று பேசினார் ஸ்டாலின்.

  தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  Published by:Muthukumar
  First published: