• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவுவதை பாஜக வழிநடத்துவதாகக் கூறுவது தவறு: மத்திய அமைச்சர் வி.கே. சிங்

தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவுவதை பாஜக வழிநடத்துவதாகக் கூறுவது தவறு: மத்திய அமைச்சர் வி.கே. சிங்

பாஜக

பாஜக

2ஜி அலைக்கற்றை ஊழலை மக்கள் மறக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் அரசு தமிழகத்துக்கு பல நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்,

  • Share this:
    திமுக கூட்டணியை நிராகரிக்க 100 காரணங்கள் என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நூலை வெளியிட்டு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேசினார்.

    அவர் பேசும்போது, திமுகவின் உரிமையாளர் ஸ்டாலின், அவருக்குப் பிறகு அவர் மகன். அது ஒரு குடும்பக் கட்சி, ஜனநாயகம் இல்லை. முதல்வர் இபிஎஸ் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் 2017-ல் கூறினார், ஆனால் அவர் வெற்றிகரமாக ஆட்சி செய்துள்ளார். மக்கள் அவரின் ஆட்சி தொடர விரும்புகின்றனர்.

    நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து, பணம் பறிப்பு ஆகியவைதான் திமுகவின் செயல்பாடுகள். திமுக- காங். கூட்டணி ஆட்சியில் மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஊழலையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.

    அவர்கள் ஆட்சியில் நடந்த 2ஜி அலைக்கற்றை ஊழலை மக்கள் மறக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் அரசு தமிழகத்துக்கு பல நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும், என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டு பேசினார், திமுக-காங்கிரஸ் கூட்டணி சிறிய ஊழல்களைச் செய்யவில்லை, பெரிய பெரிய ஊழல்களை செய்தனர். அவற்றை பட்டியலிட முடியாது.

    மாநில அரசின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு உதவுவதை வைத்து, தமிழக அரசை, பாஜக வழிநடத்துகிறது என, கூற முடியாது. தமிழகம், பல துறைகளில், முதலிடம் பிடித்துள்ளது. திராவிடம் என்ற பெயரில், கடவுள் மறுப்பு, ஹிந்து கடவுள்களை விமர்சிப்பது போன்ற செயல்களில் தி.மு.க., ஈடுபடுகிறது, என்றார்.

    இதற்கிடையே திருவல்லிக்கேணியில் நேற்று பிரச்சாரம் செய்த அன்புமணி ராமதாஸ், திமுக தலைமையில் மன்னராட்சி என்றால் மாவட்டத்தில் குறுநில மன்னர்கள் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் அவர்களின் பிள்ளைகள் அவர்களின் உறவினர்கள்தான் அங்கு பதவிக்கு வரமுடியும். மு.க.ஸ்டாலின் மக்களை நம்பவில்லை. வாக்காளர்களை, சிறுபான்மையினரை, மாணவர்களை என யாரையும் அவர் நம்பவில்லை. யாரை நம்புகிறார் தெரியுமா பீகாரில் இருந்து வந்த பிரசாந்த் கிஷோர் என்ற நபரை நம்புகிறார். பீகாரில் இருந்து அவரை இங்கு அழைத்து வந்து அவரிடம் 200 கோடி ரூபாயை கொடுத்து என்னை எப்படியாவது முதல்வராக்குங்கள் என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின், அதிமுக மக்களாட்சியைத் தருகிறது. என்று பேசினார் அன்புமணி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: