தேர்தலை ஒட்டி தலைமைச் செயலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறப்பு!

சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்தும் வெப் கேமரா மூலமாக நேரடியாக கண்காணிக்கப்படும் என்று சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.

Web Desk | news18
Updated: April 17, 2019, 8:43 AM IST
தேர்தலை ஒட்டி தலைமைச் செயலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறப்பு!
சத்யபிரதா சாஹூ
Web Desk | news18
Updated: April 17, 2019, 8:43 AM IST
தமிழகத்தில் உள்ள 30,000 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் பறக்கும் படையினரின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சத்ய பிரதா சாஹூ கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மொத்தமாக 67,720 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும் என சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.

மேலும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 160 கம்பெனி துணை ராணுவப் படைகளும், 35, 000 போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சாஹூ கூறினார்.

வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் எனக் கூறிய சாஹூ, வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மதுரையில் சித்திரை திருவிழாவிற்கு இடையே தேர்தல் நடைபெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல், 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Also see... வேலுாரில் தேர்தல் ரத்தானது ஜனநாயகப் படுகொலை - மு.க ஸ்டாலின்  

தமிழகத்தில் தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

Also see... தேனியில் துப்பாக்கிச்சூடு நடத்தி அமமுக அலுவலகத்தில் அமமுக அலுவலகத்தில் சோதனையிட்ட பறக்கும் படை: ரூ 1.48 கோடி பறிமுதல்


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...