நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

நாளை மாலை 3 மணிவரை வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். வேட்புமனு திரும்பப் பெறுவது முடிவடைந்த பின்னர், நாளை மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
தேர்தல் ஆணையம்
  • News18
  • Last Updated: April 17, 2019, 3:21 PM IST
  • Share this:
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு கடந்த 19-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, 26-ம் தேதி மாலை நிறைவடைந்தது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 134 பெண்கள், 2 திருநங்கைகள் உள்பட 1,200 பேர் மனுத் தாக்கல் செய்தனர். அதேபோல், 18 சட்டமன்றத் தொகுதிகளில் 74 பெண்கள் உள்பட 485 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.


இதையடுத்து, நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்ற நிலையில், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஆ.ராசா, திருமாவளவன், எச்.ராஜா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி மற்றும் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை ஆகியோரின் வேட்புமனுக்கள் நீண்ட இழுபறிக்கு பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதேபோல், பொன்.ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி ஆகியோரும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

நாளை மாலை 3 மணிவரை வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். வேட்புமனு திரும்பப் பெறுவது முடிவடைந்த பின்னர், நாளை மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.Also see... சர்ச்சையான தமிழிசையின் ட்வீட்! எரிச்சலான நெட்டிசன்கள்
First published: March 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading