கனிமொழிக்கு வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்.. வயிறு வலிக்க சிரித்த மக்கள்!

#ADMK MLA Candidate #Campaign For #DMK Candidate #Kanimozhi | இடைத்தேர்தல் பிரசாரத்தை அதிமுக வேட்பாளர் சின்னப்பன் விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே தொடங்கினார்.

Web Desk | news18
Updated: March 20, 2019, 10:33 PM IST
கனிமொழிக்கு வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்.. வயிறு வலிக்க சிரித்த மக்கள்!
.
Web Desk | news18
Updated: March 20, 2019, 10:33 PM IST
விளாத்திகுளத்தில் அதிமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திமுக மக்களவை வேட்பாளரான கனிமொழிக்கு வாக்கு கேட்டதால் கூயிருந்த பொதுமக்கள் வயிறு வலிக்க சிரித்த சம்பவம் நடந்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக இருந்த 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

காலியாக இருந்த 18 சட்டமன்ற தொகுதிகளில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியும் அடங்கும். இந்த சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து, இடைத்தேர்தல் பிரசாரத்தை அதிமுக வேட்பாளர் சின்னப்பன் இன்று (மார்ச் 20) விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே தொடங்கினார். அப்போது மக்கள் அதிகளவில் அங்கு குவிந்திருந்தனர்.

ஒரு கட்டத்தில் மக்கள் மத்தியில் பேசிய அவர், தூத்துக்குடி திமுக மக்களவை வேட்பாளர் கனிமொழியின் பெயரை கூறியதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்ததுடன், வயிறு வலிக்கச் சிரித்தனர். பின்னர் சுதாரித்த சின்னப்பன், தமிழிசை சவுந்தரராஜன் பெயரை சரியாக்கூறி சமாளித்தார்.

Also Watch...
First published: March 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...