• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டாத முதியவர்கள்... இதுவரை இத்தனை சதவீதம் தான்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டாத முதியவர்கள்... இதுவரை இத்தனை சதவீதம் தான்!

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

  • Share this:
    நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள், ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில், 7 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு முதியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட 86 லட்சத்து 28 ஆயிரத்து 324 பேர் உள்ளனர். இவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

    மேலும், 21 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 45 முதல் 59 வயது வரையானவர்களில் 75 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 29 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல, 18 முதல் 44 வயது வரையானவர்களில் 48 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 11 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் தயக்கம் காட்டியபோதிலும், 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தொடக்கத்தில் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால், தற்போது ஆர்வம் குறைந்திருப்பதாகவும், வெளியில் எங்கும் செல்வதில்லை என்பதால், தடுப்பூசி அவசியமில்லை என்று பல குடும்பங்கள் அலட்சியமாக இருப்பதாக அவர் கூறினார். முதியவர்களால் தடுப்பூசி மையங்களுக்கு எளிதில் வர முடியாத நிலையில், சென்னையைப் போன்று வயதானவர்களுக்கு மாநிலம் முழுவதும் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த உத்தரவுகள் வழங்கப்பட்டிருப்பதாக ராதாகிருஷ்ணன் கூறினார்.

    Also Read : மாணவர்களுக்கு குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி வழங்குவதில் தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது- ஸ்டாலின் பெருமிதம்

    தமிழ்நாட்டில் இதுவரை ஏற்பட்ட மொத்த கொரோனா உயிரிழப்புகளில் அதிகபட்ச இறப்புகள் 60 வயதுக்கு மேற்பட்ட வயது பிரிவிலேயே ஏற்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் இறுதி வரையான காலத்தில் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 34 ஆயிரத்து 878 பேர் உயிரிழந்தனர். இதில், 58 சதவீத இறப்புகள், 60 வயதுக்கு மேற்பட்ட பிரிவிலேயே ஏற்பட்டுள்ளன. 35 சதவீத இறப்புகள், 41 முதல் 60 வயது வரையானவர்களிலும், 7 சதவீத உயிரிழப்புகள் 21 முதல் 40 வயது வரையானவர்களுக்கும் ஏற்பட்டுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: