சிகிச்சைக்கு வந்த முதியவர் உணவின்றி குப்பைக் கிடங்கில் கிடந்த அவலம்!

சிகிச்சைக்கு வந்த முதியவர் உணவின்றி குப்பைக் கிடங்கில் கிடந்த அவலம்!
  • Share this:
சிகிச்சைக்காக வந்த முதியவர் மூன்று நாட்களாக உண்ண உணவின்றி எலும்பும் தோலுமாக மருத்துவமனை குப்பை கிடங்கில் இருந்த அவலம் நிகழ்ந்துள்ளது.

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக வந்த செந்தில்குமார் என்பவரை மருத்துவமனை மருத்துவர்கள் கவனிக்காமல் விட்டதால் மருத்துவமனை வளாகத்தில் சுற்றிவந்த அந்த நபர் கடந்த 3 நாட்களாக உண்ண உணவு இல்லாமல் மிகவும் உடல்தளர்ந்த நிலையால் மருத்துவமனையின் சவக்கிடங்கு அருகே படுத்த படுக்கையாக குப்பையில் கிடந்துள்ளார்.
அந்த நபரை மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவமனை மேற்ப்பார்வையாளர்கள் என எவரும் கண்டுகொள்ளமல் விட்டுவிட்டனர். நோய் ஒரு புறம் இருந்தாலும், உண்ண உணவு இல்லாமல் எலும்பு கூடு போல் மெலிந்து காணப்பட்ட அந்த நபரை பொது மக்கள் பார்த்து மருத்துவமனை முதன்மை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அவரை மீட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எந்த நோய் காரணமாக மருத்துவமனைக்கு வந்தார் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என்ற விவரம் இதுவரை தெரியவில்லை, அவர் பிழைத்தால் மட்டுமே அவரை பற்றிய விவரம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...
First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading