கொரோனா வைரஸ் தொற்று அனைவரையும் பல வழிகளில் பாதித்துள்ளது. சமீபத்தில் ஒரு முதியவர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பின்னர் இலவசமாக சிகிச்சை பெற்றார். மேலும் சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டிருந்தாலும், அவரது உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவுக்கு தனது நன்றியைத் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பிய அவர், தனது வயலில் தானே பயிரிட்டு வளர்த்த நெற்கதிர்களில் இருந்து கிடைத்த அரிசியை அவர்களுக்கு பரிசளித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் உலகெங்கிலும் உள்ள மக்கள் எல்லா வகையிலும் அவதிப்பட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த கடினமான காலங்களில் கூட மறுக்க முடியாதது மக்கள் ஒருவருக்கொருவர் காட்டிய இரக்கமும், அன்பும் தான்!.
இதனை நிரூபிக்கும் வகையில் இந்தியாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை ட்விட்டரில் பகிர்ந்த டாக்டர். உர்வாஷி சுக்லா, “ஐ.சி.யு வில் 15 நாட்கள் தங்கிய பின்னர் (அந்த 12 நாட்களில் வென்டிலேட்டரில்) வயதான நபர் ஒருவர் கொரானா நோய் தொற்றிலிருந்து மீண்டார். அவருக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டது. கொரோனாவிலிருந்து மீண்ட பின்னர் அவருக்கு சிகிச்சையளித்ததற்கு எங்களது மருத்துவ அணிக்கு நன்றி சொல்ல விரும்பினார். ஆகையால், அவர் தனது சொந்த வயலில் பயிரிட்ட அரிசியை பரிசளித்தார்” என்று பதிவிட்டுள்ளார்.
அந்த ட்வீட்டில், அந்த முதியவரால் பரிசளிக்கப்பட்ட அரிசியின் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இதற்கு கருத்து தெரிவித்துள்ள ஒருவர், நாம் எதிர்பார்ப்பது போல மனிதர்களின் இதயங்கள் உண்மையில் அன்பும், போற்றுதலும் நிறைந்திருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு நபர், "அவரது உணர்வுகளைப் பாராட்டுங்கள். அவர் அளித்த அரிசி எளிமையானது அல்ல, ஏனெனில் இது அவரது கடின உழைப்பால் விளைந்த அவரது இதயத்திலிருந்தும், ஆன்மாவிலிருந்தும் கிடைத்த ஆசீர்வாதங்கள்.
Senior citizen recovered from Covid 19 after ICU stay of 15 days (out of that 12 days on ventilator).
He was a free patient and he wanted to say thanks to treating team. Rice grown by him in his own field. pic.twitter.com/kbPkoyjoYC
உங்கள் ஒப்புதலுக்கு நன்றி. நல்ல சேவையை நீங்கள் நிறுத்த மாட்டீர்கள் டாக்டர் உர்வி." என்று தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். ஒருவரின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான சான்றாக இந்த பரிசை ஒரு நபர் வழங்கக்கூடிய மிகச் சிறந்த விஷயம் என்று மற்றொரு நபர் கருத்து தெரிவித்தார். மேலும் ஒருவர், அரிசியை வெள்ளை தங்கத்துடன் ஒப்பிட்ட அவர், "இது ஒரு தங்க இதயம் உள்ள ஒருவரிடமிருந்து கிடைத்த வெள்ளை தங்கம் #மரியாதை" என்றும் பதிவிட்டார்.
இந்த பரிசுக்கு மருத்துவர் உண்மையிலேயே தகுதியானவர் என்று கருத்து தெரிவித்த ஒரு பெண், “அட !! பணக்காரர், டாக்டர். உர்வி. நான் உண்மையில் என் கண்களில் ததும்ப ததும்ப கண்ணீரோடு இருக்கிறேன், நீங்கள் பகலிலும், வெளியேயும் என்ன செய்ய போகிறீர்கள் என்று நம்ப முடியவில்லை. ” என்று பதிவிட்டிருக்கிறார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.