ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தள்ளாத வயதிலும் தெருவில் போண்டா விற்கும் தம்பதியினர்-வைரலாகும் வீடியோ

தள்ளாத வயதிலும் தெருவில் போண்டா விற்கும் தம்பதியினர்-வைரலாகும் வீடியோ

Viral Video Of Elderly Couples : நெட்டிசன்களின் பாராட்டை பெற்று வரும் வயதான தம்பதியினர்..

Viral Video Of Elderly Couples : நெட்டிசன்களின் பாராட்டை பெற்று வரும் வயதான தம்பதியினர்..

Viral Video Of Elderly Couples : நெட்டிசன்களின் பாராட்டை பெற்று வரும் வயதான தம்பதியினர்..

  • 2 minute read
  • Last Updated :

இன்டர்நெட் என்பது பல்வேறு வகையான கன்டென்ட்களின் களஞ்சியமாக இருக்கிறது. இவற்றில் சில வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிறைந்ததாக இருக்கும். சில நம் மனதை தொடும் அல்லது நெகிழ செய்பவையாக இருக்கும். சமீப காலங்களாக சிறு சிறு விற்பனையாளர்களின் கதைகளை பலர் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நாக்பூர் நகர தெருக்களில் தர்ரி போஹா (tarri poha) மற்றும் ஆலு போண்டா விற்று பிழைப்பு நடத்த முயற்சிக்கும் 70 வயதுக்கும் மேற்பட்ட தம்பதிகளின் கதை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அதுவும் தர்ரி போஹாவை ரூ.10 மற்றும் ஆலு போண்டாவை ரூ.15 என்ற மலிவு விலையில் விற்று வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர் இந்த முதிய தம்பதி.

நாக்பூர் blogger-களான இரட்டையர்கள் விவேக் மற்றும் ஆயிஷா ஆகியோர் தங்களது இன்ஸ்டா பேஜான eatographers மூலம் 70 வயதிற்கு மேற்பட்ட குறிப்பிட்ட ஜோடி இடம் பெற்றுள்ள வீடியோவை ஷேர் செய்து உள்ளனர். இந்த வீடியோ க்ளிப் நாக்பூரில் உள்ள தண்டபெத்தில் உள்ள பண்டிட் நேரு கான்வென்ட்டுக்கு எதிரே பிரகாஷ் பான் கார்னர் முன் முதிய தம்பதிகள் தின்பண்டங்கள் விற்பதை காட்டுகிறது.

also read : உடற்பயிற்சி மேற்கொள்ளும் பூனை ... சிக்ஸ் பேக் வைக்க போராடும் வீடியோ வைரல்

மேலும் அந்த வீடியோவில் தம்பதிகள் ரூ.10-க்கு ஒரு தட்டில் போஹாவையும், ரூ.15-க்கு ஆலு போண்டாவையும் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவதை காட்டுகிறது. வீடியோவில் பேசியுள்ள முதியவர் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தின்பண்டங்களை தயாரிப்பதாகவும், காலை 6 மணிக்குள் தங்கள் ஸ்டாலைத் திறப்பதாகவும் விளக்குகிறார்.

மறுபுறம் முதியவரின் மனைவி முகத்தில் ஒரு பெரிய புன்னகையுடன் போஹா தயாரிப்பதை காணலாம். வாடகை மற்றும் பிற நிதி தேவைகளுக்காக வாழ்வாதாரம் ஒன்றை நாட வேண்டியிருந்தது என்று இந்த வயதிலும் அதிகாலை எழுந்து உணவு பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்யும் அந்த மூதாட்டி வீடியோவில் பேசி இருக்கிறார். இந்த வயதான தம்பதியின் எனர்ஜியை பார்த்த நெட்டிசன்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

"70 வயதான இந்த முதிய தம்பதியால் வாடகை செலுத்த முடியாத காரணத்தால் பிழைப்புக்காக தர்ரி போஹா விற்க தொடங்கி உள்ளனர். அதிகாலையிலேயே எழுந்து, எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு, காலை 5 மணிக்கு இங்கு வருவார்கள். இவர்கள் நாக்பூர் பாணியில் தர்ரி போஹாவை ரூ.10-க்கு மட்டுமே விற்கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளாக தங்கள் பிழைப்புக்காக இந்த சிறிய ஸ்டாலை நடத்துகிறார்கள்.


இந்த வயதிலும் அவர்கள் நம்பிக்கை இழக்காமல் கடினமாக உழைக்கிறார்கள். இதை அதிகமாக ஷேர் செய்து அவர்களுக்கு ஆதரவளிப்போம்.." இந்த அழகான ஜோடி ஒரு தட்டு தார்ரி போஹாவை ரூ.10, ஒரு தட்டு ஆலு போண்டாவை ரூ.15-க்கு விற்கிறது என்று இன்ஸ்டாவில் கேப்ஷனிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ க்ளிப் இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட வியூஸ்களைப் பெற்றுள்ளது மற்றும் பல ரியாக்ஷன்களை பெற்றுள்ளது. பல யூஸர்கள் முதிய தம்பதியின் போராட்ட குணத்தை வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள். மேலும் சில யூஸர்கள் முதியவர்களின் இந்த ஸ்டால் இருக்கும் இடத்தை பற்றிய விவரங்களை கேட்டு கமெண்ட்ஸ் செய்திருக்கிறார்கள்.

First published: