Home /News /tamil-nadu /

சென்னையில் வயதான தம்பதி அடித்துக்கொலை.. பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட சடலம்.. ஓட்டுநர் அளித்த பகீர் வாக்குமூலம்!

சென்னையில் வயதான தம்பதி அடித்துக்கொலை.. பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட சடலம்.. ஓட்டுநர் அளித்த பகீர் வாக்குமூலம்!

சென்னையில் வயதான தம்பதி அடித்துக்கொலை.. பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட சடலம்.. ஓட்டுநர் அளித்த பகீர் வாக்குமூலம்!

சென்னையில் வயதான தம்பதி அடித்துக்கொலை.. பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட சடலம்.. ஓட்டுநர் அளித்த பகீர் வாக்குமூலம்!

ஸ்ரீகாந்த் - அனுராதா தம்பதியினரை ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் ரவி கொலை செய்து சடலங்களை காரில் எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைலாப்பூர் துவகாரா மகாலட்சுமி தெரு பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதியினர் ஸ்ரீகாந்த்(60), அனுராதா(55). இவர்களது மகள் சுனந்தா அமெரிக்காவில் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா தம்பதியினர் அமெரிக்காவில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். பின்னர் ஒரு மாதத்திற்கு பின் நேற்று காலை விமானம் மூலமாக சென்னை வந்துள்ளனர்.

தொடர்ந்து, 10 வருடமாக தங்களது வீட்டில் கார் ஓட்டுனராக பணிபுரியும் நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரை விமான நிலையம் வர வழைத்துள்ளனர். கார் ஓட்டுநரான கிருஷ்ணா இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனிடையே, அமெரிக்காவிலுள்ள இவர்களது மகள் தனது தாய் தந்தைக்கு போன் செய்ய நீண்ட நேரமாக அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில், உறவினர்கள் வீட்டுக்கு வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது ஸ்ரீகாந்த், அனுராதா தம்பதியினர் அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்த இரண்டு லக்கேஜ் பேக்குகள் திறந்த நிலையில் கலைக்கப்பட்டு இருந்ததும் அதிலிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து பணம், நகைக்காக தம்பதியினரை கார் டிரைவர் கிருஷ்ணா கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது கிருஷ்ணா காரில் ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மைலாப்பூர் தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியில் இன்னோவா காரில் சென்றுக்கொண்டிருந்த டிரைவர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் டார்ஜிலிங்கைச் சேர்ந்த ரவி ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.

Exclusive | பாஜகவில் இணைய உள்ளேன்.. திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் பரபரப்பு பேட்டி

விசாரணையில் பணம் மற்றும் நகைக்காக அமெரிக்காவிலிருந்து வந்த ஸ்ரீகாந்த் அனுராதா தம்பதியினரை மைலாப்பூர் வீட்டில் கொடூரமாக அடித்துக் கொலை செய்து பின் அவர்களது உடல்களை காரில் எடுத்துச்சென்று ஈசிஆர் சாலை நெம்மேலி அருகே உள்ள அவர்களது பண்ணை வீட்டில் புதைத்து வைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், ரூ.20 லட்சம் பணம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து தம்பதியினரை கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் கொள்ளையடித்த பணம் மற்றும் நகையுடன் ஆந்திரா வழியாக நேபாளம் தப்பிச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

சுமார் 10 ஆண்டு காலமாக ஸ்ரீகாந்த் அனுராதா தம்பதியினர் வீட்டில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த கிருஷ்ணா நீண்டகாலமாகவே பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி வந்துள்ளார் என்பதும் அதற்கு துணையாக தனது நண்பரான டார்ஜிலிங்கைச் சேர்ந்த ரவியையும் சேர்த்து கொண்டுள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பணம் நகைகள், இன்னோவா கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் மைலாப்பூர் போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மைலாப்பூர் காவல் துணை ஆணையர் திஷா மிட்டல், உதவி ஆணையர் கவுதம் ஆகியோர் சம்பவ இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க - திமுக அரசின் ஓராண்டுப் பயணமும்.. சர்ச்சைகளும்!

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சென்னை காவல் தெற்கு கூடுதல் ஆணையர் கண்ணன் ஐ.பி.எஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். மேலும், மீட்கப்பட்ட நகை பணம் ஆகியவற்றை செய்தியாளர் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

மேலும் ஈசிஆர் சாலை நெம்மேலி அருகே பண்ணை வீட்டில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா ஆகியோரின் உடலை வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் மயிலாப்பூர் போலீசார் இன்னும் சற்று நேரத்தில் தோண்டி எடுக்க உள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீகாந்த் - அனுராதா தம்பதியினரை கிருஷ்ணா மற்றும் ரவி கொலை செய்து சடலங்களை காரில் எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகார் கொடுக்கப்பட்ட 6 மணி நேரத்தில் கொலை குற்றவாளிகளை மைலாப்பூர் போலீசார் கைது செய்திருப்பதும் நகை மற்றும் பணத்தை மீட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Esakki Raja
First published:

Tags: Chennai, Crime News, Murder

அடுத்த செய்தி