ஒசூர், திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடம் கண்டறியப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மிண்ணனு நிறுவனத்தின் (எல்காட்) துறை ரீதியான ஆய்வுக்கூட்டம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் எல்காட் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆய்வுக்கூட்டத்தில் எல்காட் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனோ தங்கராஜ், எல்காட் பழமைவாய்ந்த நிறுவனம் என்றும், அதனை மேம்படுத்தும் வகையில் நிதி மேலாண்மை குறித்து திட்டங்கள் வகுத்து கையேடு உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.
மேலும், முதலமைச்சரின் உத்தரவின்படி, ஒசூர், திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடம் கண்டறியப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
Also Read: தாயின் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. போக்சோ சட்டத்தில் இருவர் கைது
தொடர்ந்து பேசிய அவர், எல்காட் நிறுவனம் புதுவேகத்துடன் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அரசு சார்ந்த நிறுவனங்கள் கணிணி வாங்குவதற்கு எல்காட் இணையதளத்தினை பயன்படுத்தி நல்ல விலையில் தரமான பொருட்களை பெற இயல்வதாகவும் இது மிகப்பெரிய சாதனை என்றும் குறிப்பிட்டார்.
எல்காட் நிறுவனத்தில் மொத்தம் 418 முழு நேர ஊழியர்கள் பணி செய்ய அனுமதி இருக்கும் நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் 100க்கும் கீழ் மட்டுமே ஊழியர்கள் பணி செய்ததாக குறிப்பிட்ட அவர், படிப்படியாக ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, நிதி ஆதாரங்களை முறையாக கையாளப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இரண்டு முழு நேர ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமித்து நிர்வாக ரீதியாகவும் முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஒளிவு மறைவற்ற தன்மையுடன் ஐ.டி துறை செயல்பட்டு வருவதோடு, சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றும் பணி நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.