காங்கிரஸ்-திமுக ஆட்சியில்தான் விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொண்டனர்: இப்ராஹிம் பேச்சு

காங்கிரஸ்-திமுக ஆட்சியில்தான் விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொண்டனர்: இப்ராஹிம் பேச்சு

ஏகத்துவ ஜமாத் தலைவர் இப்ராஹிம்.

பா.ஜ. ஆட்சியில் தான் விவசாயிகள் சிறு குறு வியாபாரிகள் சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒதுக்கும் நிதி மக்களுக்காகத் தான்; குடும்பத்துக்காக அல்ல

 • Share this:
  காங்கிரஸ்-திமுக ஆட்சியில்தான் விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொண்டனர் என்று ஏகத்துவ ஜமாத் தலைவர் இப்ராஹிம் காட்டமாக விமர்சித்தார்.

  வேலூரில் சிவசக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் இப்ராஹிம் கூறியதாவது:

  காங். - தி.மு.க. ஆட்சியில்தான் விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொண்டனர். விவசாய நிலங்கள் கட்டடங்களாக மாற்றப்பட்டன. இப்போது விவசாயிகள் நலன் குறித்து பேசுகின்றனர்.

  விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கும் ஆட்சியாகத்தான் தி.மு.க. இருந்தது. தி.மு.க.வின் குடும்ப ஆட்சி மீண்டும் வந்தால் தமிழகம் சீரழியும். பிரதமர் மோடி அவரது ஆட்சி மீது பழி சொல்ல முடியாத நிலையில் பா.ஜ. - அ.தி.மு.க. கூட்டணியை மதவாத கூட்டணி என்கின்றனர்.

  ஆனால் பா.ஜ. ஆட்சியில் தான் விவசாயிகள் சிறு குறு வியாபாரிகள் சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒதுக்கும் நிதி மக்களுக்காகத் தான்; குடும்பத்துக்காக அல்ல, என்றார்.

  முன்னதாக மதுரையில் அவர் வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக கூட்டணிக்கு அடிபணிந்து குறிப்பிட்ட இயக்கத் தலைவர்கள் வளம் பெற இஸ்லாமிய சமுதாயத்தை பலிகடா ஆக்குகின்றனர் என்று பிற முஸ்லிம் அமைப்புகளைச் சாடியது குறிப்பிடத்தக்கது.

  மேலும் திமுக மீது அவர் கடுமையாக மதுரையில் விமர்சனம் வைத்த போது, இஸ்லாமிய மக்கள் எந்த ஒரு மத நம்பிக்கையையும் புண்படுத்த கூடாது என நன்றாக புரிந்துள்ளனர். ஆனால் திட்டமிட்டு இஸ்லாமிய அமைப்புகள் என்ற பெயரிலுள்ள எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ., த.மு.மு.க., போன்றவர்கள் பிற மத நம்பிக்கையை அவர்களாகவோ, அல்லது ஹிந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்துபவர்களை தங்கள் மேடையில் அமர வைத்து இழிவுபடுத்துவதன் மூலம் இஸ்லாமிய, ஹிந்து மக்களுக்கும் இடையே மிகப்பெரிய பிளவை ஏற்படுத்துகின்றனர்.

  வாக்கு வங்கி அரசியலுக்காக தி.மு.க. கூட்டணிக்கு அடிபணிந்து குறிப்பிட்ட இயக்க தலைவர்கள் வளம் பெற இஸ்லாமிய சமுதாயத்தை பலிகடா ஆக்குகிறார்கள்.

  இதை நான் சுட்டிகாட்டி இஸ்லாமிய மக்கள் என்பது வேறு, இஸ்லாமிய அமைப்பு என்ற பெயரால் தவறான வழி நடத்துபவர்கள் வேறு என கூறும் போது அதை பிடிக்காதவர்கள் தொடர்ந்து என் பேச்சுக்கு முட்டுக்கட்டை போட கலவரத்தை ஏற்படுத்தவும், தாக்கவும் முயற்சிக்கின்றனர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: