பக்ரீத் 2021 : கொரோனாவிலிருந்து உலக மக்கள் மீள வேண்டும் - இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத்

கோவையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமியர்கள் பக்ரித் தொழுகையில் கலந்து கொண்டனர்.

  • Share this:
இஸ்லாமியர்களின் இருபெரும் பண்டிகைகளான பக்ரீத் மற்றும் ரம்ஜான் பண்டிகை கடந்த ஆண்டு கொரொனா தொற்று காரணமாக மிக எளிமையாக வீடுகளிலேயே தொழுகையுடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரொனா தொற்று குறைந்து இருப்பதன் காரணமாக பக்ரீத் பண்டிகையானது பழைய உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

கோவையில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகள் காலை முதல் நடத்தப்பட்டது. கோவை ஒப்பணக்கார வீதி யில் உள்ள அத்தார்  பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் முகக்கவசம் அணிந்தபடி தொழுகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Also Read : குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம்... வதந்திகளை நம்பி ஏமாறும் ரேஷன் அட்டைத்தாரர்கள்

பண்டிகையினை முன்னிட்டு நடைபெறும் கூட்டுத் தொழுகை நிகழ்ச்சியானது இந்த முறை நடத்தப்பட வில்லை. தியாக திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் கொரொனா தொற்றில்  இருந்து மீளவும், பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மக்கள் மீளவும் தொழுகை நடத்தப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின்னர் அனைவரும் இணைத்து பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.

Also Read : சென்னையில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த மழை!

இன்றைய தினம் ஆடு,மாடுகளை பலியிடுதல் நிகழ்வு முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்றது. குர்பானி என்ற பெயரில் ஆடு ,மாடு போன்றவற்றை பலியிட்டு அவற்றை மூன்று பங்குகளாக பிரித்து ஒரு பங்கை தனக்கும் , மற்றொரு பங்கை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் , மற்றொரு பங்கை ஏழை எளியவர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சியுடன் இந்த பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. தொழுகை நிகழ்ச்சிக்குப் பின்னர் இஸ்லாமியர்கள்  ஒருவருக்கொருவர்  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: