பெரியார் பற்றி ரஜினிகாந்த் சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம்... நாளை தீர்ப்பு!

பெரியார் பற்றி ரஜினிகாந்த் சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம்... நாளை தீர்ப்பு!
ரஜினி
  • News18
  • Last Updated: March 9, 2020, 5:25 PM IST
  • Share this:
பெரியார் பற்றிய சர்ச்சை கருத்து விவகாரத்தில், நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி, திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை எழும்பூர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் துக்ளக் விழாவில் பங்கேற்ற ரஜினி காந்த், 1971ம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த பேரணி குறித்து பேசி இருந்தார்.

அந்த பேச்சில், ரஜினிகாந்த் தவறான தகவலை கூறி இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. காவல்நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டது.


Also see... மகள் ஆத்யந்தாவுடன் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்டார் நடிகை சினேகா..!

ரஜினி மீது காவல்துறை வழக்குப்பதிய வேண்டுமென்று சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட தலைவர் உமாபதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.Also see...
First published: March 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading