முட்டை விலை 40 காசு உயர்ந்து ரூ.4.80க்கு விற்பனை..

முட்டை விலை 40 காசு உயர்ந்து ரூ.4.80க்கு விற்பனை..

கோப்புப் படம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 40 காசுகள் உயர்ந்து நான்கு ரூபாய் 80 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • Share this:
    நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.4.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பனியின் தாக்கம் அதிகரிப்பு, பிற மண்டலங்களில் தொடர்ந்து விலை மாற்றம், கார்த்திகை மாதம் நிறைவடைய இருப்பது உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ 84 ரூபாயாகவும், முட்டைக் கோழி கிலோ 60 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு முட்டையின் விலை 25 காசுகள் உயர்ந்திருந்த நிலையில், தற்போது 40 காசுகள் உயர்ந்துள்ளது. கடந்த ஒரே வாரத்தில் மொத்தம் 65 காசுகள்  உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க...அமெரிக்காவில் நர்ஸ்க்கு முதலாவது கொரோனா தடுப்பூசி போடப்பட்டது



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: