முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பறவைக் காய்ச்சல் எதிரொலி.. முட்டை விலை குறைந்தது

பறவைக் காய்ச்சல் எதிரொலி.. முட்டை விலை குறைந்தது

முட்டை

முட்டை

தென்மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதிக்கு, 10 நாட்களுக்கு தடை விதித்துள்ளது மத்திய பிரதேசம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பறவைக் காய்ச்சல் எதிரொலியால் நாமக்கல்லில் முட்டை விலை 25 காசுகள் குறைந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த வாரம் பறவைக் காய்ச்சல் பரவிய நிலையில், கேரளா, மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேச மாநிலங்களிலும், கோழி உள்ளிட்ட பறவைகள், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டன.

இந்த பறவைக் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்ததுடன், கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழி மற்றும் வாத்துக்கள் கொல்லப்பட்டன. இந்நிலையில், கேரளாவில் இருந்து வரும் கோழிகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில், வாத்துக்கள் மற்றும் கோழிகள் வளர்க்கப்படும் பண்ணையில், கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பறவைகளின் மாதிரிகளை பரிசோதனைக்காக சேகரித்த அதிகாரிகள், வெளியிடங்களில் இருந்து தீவனங்களை கொண்டு வரக்கூடாது என உத்தரவிட்டனர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

மேலும் படிக்க...கொரோனா தடுப்பூசி: எங்கிருந்து வரும்? எப்படி உங்கள் ஊருக்கு வரும்?

நாமக்கலில் கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முட்டைகளை கொண்டு செல்லும் லாரிகளிலும் தடுப்பு மருந்து தெளிக்கப்படுகிறது. இதற்கிடையே, நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பறவை காய்ச்சலால் மக்களிடையே ஒருவித தயக்கம் ஏற்பட்டுள்ளதால், முட்டை விலையை குறைக்கலாம் என பண்ணை உரிமையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதை ஏற்று முட்டை விலை 25 காசுகள் குறைக்கப்பட்டது. இதனால் 5 ரூபாய் 10 காசுகளாக இருந்த முட்டை கொள்முதல் விலை, 4 ரூபாய் 85 காசுகளாக சரிந்துள்ளது.

இந்நிலையில், தென்மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதிக்கு, 10 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Bird flu, Egg