நாமக்கலில் 12 கோடி முட்டைகள் தேக்கம்: கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வேதனை!

நாமக்கல் மண்டலத்தில் தற்போது 12 கோடி முட்டைகள் தேங்கியிருப்பதால், தங்களது தொழிலை காக்க தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு முன்வர வேண்டும் என்று பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கலில் 12 கோடி முட்டைகள் தேக்கம்: கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வேதனை!
முட்டை- கோப்புப் படம்
  • News18
  • Last Updated: May 29, 2019, 8:01 AM IST
  • Share this:
அதிக விலை நிர்ணயம், வியாபாரிகள் வெளிமாநிலங்களில் கொள்முதல் போன்ற காரணங்களால் நாமக்கல் மண்டலத்தில் 12 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் இயங்கும் சுமார் 1,100 கோழிப்பண்ணைகளில் நாளொன்றுக்கு சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இங்கிருந்துதான் தமிழக அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கும் வியாபாரிகளுக்கும் முட்டை சப்ளை நடைபெறுகிறது.

தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால், முட்டைகள் ஒரு புறம் தேக்கமடைந்துள்ள நிலையில், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் குறைந்த விலைக்கு கிடைக்கும் முட்டைகளை வாங்க வியாபாரிகள் படையெடுப்பதாக பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.


வெளிமாநிலங்களில் முட்டைக்கு குறைந்த விலை நிர்ணயிக்கும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, நாமக்கல் முட்டைக்கு மட்டும் அதிக விலை நிர்ணயிப்பதே காரணம் என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலையைக் காட்டிலும் தாங்கள் 50 காசுகள் வரை குறைத்து விற்பனை செய்தாலும், முட்டைகளை வாங்க ஆளில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

இதைவிட 90 காசுகள் குறைவாக ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் முட்டைகள் கிடைப்பதால், வியாபாரிகள் அங்கு சென்று கொள்முதல் செய்வதாக கோழிப் பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.நாமக்கல் மண்டலத்தில் தற்போது 12 கோடி முட்டைகள் தேங்கியிருப்பதால், தங்களது தொழிலை காக்க தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு முன்வந்து விலையை குறைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also see... திமுக எஃகு கோட்டையை ரஜினியால் சேதப்படுத்த முடியாது: வைகோ உறுதி

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்