முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விஜய் டிவி கொடுத்த அங்கீகாரம்... முன்னணி சேனலில் ஹீரோவாகும் ‘ஈரமான ரோஜாவே’ ஷ்யாம்!

விஜய் டிவி கொடுத்த அங்கீகாரம்... முன்னணி சேனலில் ஹீரோவாகும் ‘ஈரமான ரோஜாவே’ ஷ்யாம்!

புகழ் கேரக்டரில் நடித்த ஷியாம், பல டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தவர்.

புகழ் கேரக்டரில் நடித்த ஷியாம், பல டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தவர்.

புகழ் கேரக்டரில் நடித்த ஷியாம், பல டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தவர்.

 • Last Updated :

  சின்னத்திரையில் முன்னணி சேனலாக இருந்து வரும் விஜய் டிவி-யில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களின் அமோக ஆதரவு பெற்று உள்ளன. இதில் முக்கியமான ஒரு சீரியலாக இருந்தது ஈரமான ரோஜாவே. ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த சீரியலில் பவித்ரா ஜனனி ஹீரோயினாக மலர்விழி என்ற கேரக்டரிலும், திரவியம் ராஜகுமாரன் வெற்றிவேல் என்ற கேரக்டரில் ஹீரோவாகவும் நடித்த இந்த சீரியலில், ஹீரோ வெற்றி ரோலுக்கு தம்பியாக புகழேந்தி என்ற கேரக்டரில் நடித்தவர் ஷியாம்.

  புகழ் கேரக்டரில் நடித்த ஷியாம், பல டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தவர். கோவையை சேர்ந்த இவருக்கு காலேஜ் படிக்கும் போதே சினிமா மீது அதிக ஆர்வம் இருந்து உள்ளது. சினிமா கனவுடன் தலைநகர் சென்னை வந்துள்ளார். ஆனால் நினைத்ததை விட மிக கடினமாக இருந்தது சினிமாவிற்கான இவரது போராட்டம். வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி கொண்டே மார்க்கெட்டிங் வேலையும் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மும்பைக்கு சென்றும் வாய்ப்பு தேடி இருக்கிறார். ஆனால் அதுவும் கை கூடவில்லை. எனவே மீண்டும் சென்னை திரும்பிய ஷியாம் சின்னத்திரையில் வாய்ப்பு தேடினார்.
   
  View this post on Instagram

   

  A post shared by r.shyam (@r.shyam_official)  ஷியாமின் முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து விஜய்-டிவியின் புதுக்கவிதை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதை தொடர்ந்து களத்து வீடு, கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, பொன்னூஞ்சல், மெல்ல திறந்தது கதவு, லட்சுமி கல்யாணம், நெஞ்சம் மறப்பதில்லை,  அரண்மனை கிளி, நிறம் மாறாத பூக்கள் போன்ற பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ஆனால் ரசிகர்களிடம் இவருக்கு மிகவும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது ஈரமான ரோஜாவே சீரியல் தான்.
   
  View this post on Instagram

   

  A post shared by r.shyam (@r.shyam_official)  இதையும் படிங்க - 28 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி - இளையராஜா கூட்டணி?

  இதில் புகழ் - அகிலா ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார் ஷியாம். இந்நிலையில் விரைவில் கலர்ஸ் தமிழ் சேனலில் விரைவில் டெலிகாஸ்ட் செய்யப்பட உள்ள வள்ளி திருமணம் என்ற சீரியலில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் ஷியாம். இதில் ஹீரோயினாக யாரடி நீ மோகினி சீரியல் புகழ் நட்சத்திரா நடிக்கிறார். இதுவரை சிறுசிறு ரோல்களில் நடித்து வந்த ஷியாம், தற்போது லீட் ரோலில் நடிக்க உள்ளதால் அவருக்கு ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: