யு.பி.எஸ்.சி தேர்வுகள் தாமதம் ஆவதால் என்ன விளைவுகள் உருவாகும்? கல்வியாளர்கள் விளக்கம்..

எத்தனை குழப்பம் இருந்தாலும் மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் தேர்வு எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்கிறார் முன்னாள் வருமானவரித்துறை ஆணையரும் தனியார் பயிற்சி மைய இயக்குனருமான சரவணகுமரன்.

யு.பி.எஸ்.சி தேர்வுகள் தாமதம் ஆவதால் என்ன விளைவுகள் உருவாகும்? கல்வியாளர்கள் விளக்கம்..
கோப்பு படம்
  • News18
  • Last Updated: September 16, 2020, 10:50 AM IST
  • Share this:
யுபிஎஸ்சி தேர்வுகள் தள்ளிப் போவதால் மாணவர்களின் வேலைவாய்ப்பு குறையும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தாவிட்டால் மாணவர்களுக்கு பெரும் வேலை இழப்பு ஏற்படும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊரடங்கு காரணமாக இந்திய ஆட்சிப் பணிக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளன. கடந்த மே மாதம் 31ஆம் தேதி நடத்த வேண்டிய யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை.


தேர்வு குறித்த தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் அக்டோபர் மாதத்திற்குள் நடத்துவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இல்லை என்றால் காலியிடங்களை ஒட்டுமொத்தமாக நிரப்பப்படாத ஒரு சூழல் ஏற்படும் என்கிறார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், தனியார் பயிற்சி மைய இயக்குனருமான இஸ்ரேல் ஜெபசிங்.
இந்த ஆண்டு 800 இடங்கள் காலியாக இருந்தால் அடுத்த ஆண்டு 900 இடங்கள் காலியாக இருக்கும் எனில் இரண்டையும் ஒன்றாக சேர்த்து  நிரப்ப வாய்ப்பில்லை.எனவே கண்டிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்வுகள் நடத்தப்படுவது நிச்சயம் என்றும் தெரிவிக்கின்றனர். ஆனால் பள்ளிகள் திறந்த பின்பு தேர்வுகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் தேர்வுகள் எப்போது நடக்கும் என்ற ஒரு குழப்பம் மாணவர்கள் மத்தியில் நீடித்து வருகிறது. எத்தனை குழப்பம் இருந்தாலும் மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் தேர்வு எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்கிறார் முன்னாள் வருமானவரித்துறை ஆணையரும் தனியார் பயிற்சி மைய இயக்குனருமான சரவணகுமரன்.Also read... நகரமயமாக்கல் திட்டங்களால் வாய்ப்புகள் உருவாகும் - பிரதமர் மோடி

தமிழகத்தைப் பொருத்தவரை  இனி அரசு வேலையில் புதிய பணியிடங்கள் நிரப்பப்பட மாட்டாது என்று ஏற்கனவே  அறிவித்துள்ளது. இது குறித்த அச்சமும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.எனவே தேர்வுகள் குறித்த ஒரு தெளிவான வழிகாட்டுதலை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தர வேண்டியது மிக முக்கியத் தேவையாக உள்ளது.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading