3 ஆண்டுகளாக குறையும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை: இடைநிற்றல் காரணமா? கல்வியாளர்கள் கேள்வி
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை குறைவது குறித்து கல்வியாளர்கள் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோப்பு படம்
- News18 Tamil
- Last Updated: July 18, 2020, 2:59 PM IST
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் பள்ளிகள் வாயிலாக இறுதி தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையில் கடந்த 3 ஆண்டுகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இடைநிற்றல் அதிகரிக்கிறதா? என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுகுறித்த புள்ளி விவரம் அதனை வெளிப்படுத்துகிறது
12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விவரம்:
2017- 8,93,262 2018- 8,60,434
2019- 8,42,512
2020- 7,79,9312017ல் 8.93 இலட்சமாக இருந்த தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை , 2020ல் 7.79 இலட்சமாகக் குறைந்திருக்கின்றது. அதாவது, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ 1.14 இலட்சம் பேர் குறைந்துள்ளது.
சரிவு தொடர்ச்சியாக ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து கல்வியாளர்கள் சில கேள்விகளை முன்வைக்கின்றனர்.
அதன்படி 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்கள் மேல்நிலைக் கல்விக்குச் செல்லும் முன்னர் இடை நிற்றல் அதிகரித்துள்ளதா? அல்லது 11ம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருமே 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதாமல் பலர் பாதியில் படிப்பைத் தொடராமலோ அல்லது தேர்வு எழுதாமலோ நின்று விடுகின்றார்களா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கல்வியலாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் கடந்த 3 ஆண்டுகளில், ஒவ்வோர் ஆண்டும் 10ம் வகுப்புத் தேர்ச்சிக்குப்பின் 11ம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை என்ன? அவர்களுள் எத்தனை மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்கள்? என்கிற புள்ளிவிவரங்களை வெளியிட கோரிக்கை வைக்கின்றனர்.
பெரும்பாலும் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மத்தியில் இடைநிற்றல் அதிகம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அந்த மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்வது கணிசமாகக் குறையும் சூழல் ஏற்ப்பட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று எச்சரிக்கின்றனர். எனவே இந்த விவகாரத்தில் உரிய விளக்கத்தை அரசு அளிக்க வேண்டும் என்கிற கருத்தை கல்வியாளர்கள் முன்வைத்துள்ளனர்.
12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விவரம்:
2017- 8,93,262