"சிறைப்பட்டாலும் கல்விக்கு தடையில்லை" சிறைக் கைதிகளுக்கு பாடம் எடுக்க கல்வித்துறை நடவடிக்கை

கைதிகளுக்கு பாடம் கற்பிக்கப்படும் போது
  • News18
  • Last Updated: December 4, 2019, 12:20 PM IST
  • Share this:
அடிப்படை கல்வியறிவு இல்லாத 776 சிறைவாசிகளுக்கு 10 சிறைகளில் பாடம் எடுக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அடிப்படை கல்வியறிவு இல்லாத 109 பெண் சிறைவாசிகள் உட்பட 776 சிறைவாசிகளுக்கு, கல்வியறிவு வழங்குவதற்கான வகுப்புகள், தமிழகத்தில் 10 சிறைகளில் நடந்து வருகிறது. இதில் 7 மத்திய சிறைகள் மற்றும் 3 மாவட்ட சிறைகள் அடங்கும்.

முறைசாரா கல்வி இயக்குனரகமும் சிறைத்துறையும் இணைந்து, எழுத, படிக்க, அடிப்படை கணக்குகள் தெரியாத சிறைவாசிகளுக்கு, கல்வியறிவை வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.


அதன்படி, புழல் மத்திய சிறை, வேலுார் மத்திய சிறை, கோவை, மதுரை மத்திய சிறைச்சாலைகள், திருச்சி மத்திய சிறை, சேலம் மத்திய சிறை, பாளையங்கோட்டை உட்பட மத்திய மற்றும் மாவட்ட சிறைச்சாலைகளில் 109 பெண் சிறைவாசிகள் உட்பட 776 சிறைவாசிகளுக்கு அடிப்படை கல்வியறிவு வழங்குவதற்கான வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

வகுப்புகளை நடத்த கல்வித்துறை தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஏற்பாடு செய்து அவர்கள் மூலம், அந்தந்த சிறை வளாககங்களுக்கு உள்ளேயே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கல்வித்துறை மற்றும் சிறைத்துறையின் இந்த முயற்சிக்கு, சிறைவாசிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Loading...

Also see...
First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...