இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பதிவு செய்ய தன்னார்வலர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக பள்ளிக்கல்வித்துறை புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது
1 முதல் 8ம் வகுப்பு வரை கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழக அரசு கொண்டு வந்துள்ள இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பெண் தன்னார்வலர்கள் அதிக அளவில் ஆண்களைக் காட்டிலும் பதிவு செய்துள்ளனர். தன்னார்வலர்கள் உதவியுடன் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கொரொனோ தாக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டதையடுத்து ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழக அரசு இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இதில் அதிக அளவில் தன்னார்வலர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்தது இதனை ஏற்று அதிக எண்ணிக்கையில் இந்த திட்டத்தில் தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். அதன்படி பெண்கள் அதிக எண்ணிக்கையில் இந்த திட்டத்தில் தன்னார்வலராக சேர்ந்துள்ளது பள்ளிக்கல்வித்துறையின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இதுவரை 1லட்சத்து 3 ஆயிரத்து 548 தன்னார்வலர்கள் பதிவு
*443 டாக்டர் பட்டம் பெற்றவர்களும் தன்னார்வலர்களாக பதிவு
*முதுகலை பட்டதாரிகள் 30 ஆயிரத்து 213 பேர்
*பட்டதாரிகள் 47 ஆயிரத்து 420 பேர்
*12ம் வகுப்பு முடித்தவர்கள் 15ஆயிரத்து 1742 பேர்
*10ம் வகுப்பு முடித்தவர்கள் 11 ஆயிரத்து 702 பேர்
*திருநங்கைகள் 41பேர்
மொத்தம்1 லட்சத்து 3 ஆயிரத்து 548 பேர் தன்னார்வலர்களாக பதிவு செய்துள்ளனர்.
இதில் 81 ஆயிரத்து 442 பெண்கள், 22ஆயிரத்து 605 ஆண்கள், திருநங்கைகள் 41 பேர் என 1 லட்சத்து 3,548 தன்னார்வலர்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.இதற்காக தன்னார்வலர்களுக்கு மதிப்பூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை ஏற்று பதிவு செய்துள்ள தன்னார்வலர்களில் குறிப்பிடத்தக்க அம்சமாக 443 டாக்டரேட் பட்டம் பெற்றவர்கள் தன்னார்வலராக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கான தன்னார்வலர்களின் பதிவு தொடர்ந்து நடைபெற்று வரக் கூடிய நிலையில் தன்னார்வலர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
ஏற்கனவே இல்லம் தேடி கல்வி திட்டம் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படுவதில் தமிழக அரசு மிகுந்த கவனமுடன் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எவ்வித சர்ச்சைக்கும் இடமளிக்காத வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட என அரசு கூறியுள்ளது. முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் ஆறு மாத காலத்திற்கு சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.