தி.மு.க தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை: படிக்காமல் கருத்து தெரிவிக்க முடியாது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் பழனிசாமி

தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை இன்னும் படிக்கவில்லை. படித்த பிறகுதான் கருத்து தெரிவிக்க முடியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தி.மு.க சார்பில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதுதான் அ.தி.மு.கவின் நிலைப்பாடு. அனைத்து கட்சிகளிலும் உள்ளது. தி.மு.க தேர்தல் அறிக்கையை படித்துப் பார்க்கவில்லை. படித்த பிறகுதான் கருத்து தெரிவிக்க முடியும். புதுச்சேரியில் விரைவில் கூட்டணி முடிவு செய்யப்படும். மக்களுக்கு தேவையானதை தேர்தல் அறிவிப்பு முன்னரே நடைமுறைப்படுத்திய கட்சி அ.தி.மு.க. புதிய தமிழகம் ஏற்கெனவே எங்களுடன் கூட்டணியில் கிடையாது.

  தே.மு.தி.கவினர் எங்களைவிட்டு பிரிந்ததால் இழப்பு இல்லை. தே.மு.தி.க முதிர்ச்சியில்லாமல் செயல்படுகிறது. கூட்டணியைவிட்டு வெளியேறியதும் பழிசுமத்துவது சரியல்ல. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தகுதி, வாக்கு வங்கி இருக்கிறது.

  அதன் அடிப்படையில்தான் சீட் வழங்கப்படும். கருத்துகணிப்புகளை மீறி விக்கரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றோம். பெரும்பான்மை தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெறும். எத்தனை தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது’ என்று தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: