விவசாயத்துக்கும், தொழிற்துறைக்கு அ.தி.மு.க அரசு முக்கியத்துவம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

விவசாயத்துக்கும், தொழிற்துறைக்கு அ.தி.மு.க அரசு முக்கியத்துவம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்

விவசாயத்துக்கும், தொழில்துறைக்கும், நீர் மேலாண்மைக்கும் அ.தி.மு.க அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்ற தேசிய செட்டியார்கள் பேரவை மாநில மாநாட்டில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமன எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ‘அனைத்து சமூக மக்களும் மேம்பட ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். உடுமலை ராதாகிருஷ்ணன், கால்நடை துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர்தான் அத்துறையே உலகளவில் மேம்பட்டுள்ளதாக கூறிய தமிழக முதல்வர், தன் தொகுதி வளர்ச்சி பெற என்னென்ன திட்டங்களை அமல்படுத்தலாம் என்று அதிக திட்டங்களை தன் தொகுதியில் அறிமுகப்படுத்தியதில் முதலில் இருப்பவர் பொள்ளாச்சி ஜெயராமன் என்று கூறினார்.

  செட்டியார் சமூக மக்கள் அ.தி.மு.கவுக்கு என்றென்றும் பக்கபலமாக இருப்பதாக கூறினார். விவசாயத்துக்கும், தொழில்துறைக்கும், நீர் மேலாண்மைக்கும் அ.தி.மு.க அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  முன்னதாக பேசிய தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பெரியகுளம், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் தான் வெற்றி பெற்றதற்கு செட்டியார் சமூக மக்களின் வாக்கு பெரிதும் உதவியாக இருந்ததாக பெருமிதம் தெரிவித்தார்.
  அனைத்து சமூக மக்களையும் சொந்தங்களாக நினைத்து வாழும் மக்கள் செட்டியார் சமூக மக்கள் என்ற அவர், குண்டூசி முதல் வைரம் வியாபாரம் வரை அனைத்து தொழிலையையும் சிறப்பாக செய்துவருபவர்கள் செட்டியார் சமூகம் என்றார்.

  நிகழ்ச்சியின் இறுதியில் தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் வெள்ளி செங்கோல் நினைப்பரிசாக வழங்கப்பட்டது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: