ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டாஸ்மாக் திறப்பு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

டாஸ்மாக் திறப்பு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

கொரோனா தொற்று இருக்கும் சூழலில் மதுக்கடைகள் திறந்தது யார் ஆட்சியில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது தொடர்பாக காரசார விவாதம் பேரவையில் நடைபெற்றது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இரண்டாவது நாள் அலுவல் இன்று நடைபெற்றது. ஆளுநர் உரை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. இன்றைய விவாதத்தின்போது, அரக்கோணம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவி, கடந்த ஆட்சியில் கொரோனா குறைவாக உள்ளபோது மதுக்கடைகள் திறந்த போது தற்போதைய முதலமைச்சர் போராட்டம் நடத்தினார். ஆனால் தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் மதுக்கடைகளை இந்த அரசு திறந்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.

  இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்றும் கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாகவும் அதோடு, கள்ளச்சாரம், கள்ள சந்தையில் அதிக விலையில் மதுவிற்பனையை தடுக்கவே மதுக்கடைகள் திறக்கப்பட்டதாக அமைச்சர் விளக்கம் அளித்தார்.

  அப்போது பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆட்சியில் கொரோனா தொற்று குறைவாக இருந்த காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை அதிமுக உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், கடந்த ஜுன் மாதம் கொரோனா பாதிப்பு 7,000ஆக இருந்ததாகவும் இன்று பாதிப்பின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

  இதற்கு பதில் அளித்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த மே மாதம் 7ம் தேதி 26,000-மாக இருந்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை, இந்த அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது 7,000-மாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  அப்போது குறுக்கீட்டு பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிப் 26 தேதி கொரோனா பரவல் 451 என இருந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியாகி நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் முழுமையாக செயல்படமுடியவில்லை என்றார். அப்போது எந்த அதிகாரிகளையும் சந்தித்து பேச முடியாத சூழல், மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் கூட்டுவதற்கு தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று தலைமைச் செயலாளர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அதிமுக ஆட்சியில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றார்.

  இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, தேர்தல் அறிவிப்பால் செயல்படமுடியவில்லை என்றால், அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டதும், மேலும் பேட்டியும் அளித்துள்ளார் என்று சுட்டிகாட்டி பேசினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இவ்வாறு விவாதம் தொடர்ந்த நிலையில் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உங்கள் ஆட்சியில் நீங்கள் கட்டுப்படுத்தியதாகவும், எங்கள் ஆட்சியில் நாங்கள் கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Edappadi Palaniswami, Tasmac