சசிகலா அ.தி.மு.கவிலேயே இல்லை - ஆடியோ விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விளக்கம்

எடப்பாடி பழனிசாமி

சசிகலா அ.தி.மு.கவிலேயே இல்லை என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.க கூட்டணி தோல்வியடைந்தது. தேர்தல் தோல்விக்குப் பிறகு எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் அ.தி.மு.கவிற்குள் இழுபறி நீடித்தது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் எதிர்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு தீவிர முயற்சி செய்தனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனியே அறிக்கைகளை வெளியிட்டுவந்தனர். அது அ.தி.மு.கவிற்குள் மோதல்போக்கு உள்ளதைக் காட்டியது. இந்தநிலையில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் 9 மாவட்டச் செயலாளர்களுடன் கட்சி இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி மட்டும் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தேர்தல் தோல்விக்கு பின்னர் சென்னை மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர்களுடன் நடைபெறும் முதல் ஆலோசனை கூட்டம். இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் ஜெயக்குமார், அசோக், திநகர் சத்யா, ஆதிராஜாராம், கே.பி.கந்தன், விருகை ரவி, வெங்கடேஷ்பாபு, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றனர்.

மீண்டும் தேர்தல் களத்திற்கு வருவதாக சசிகலா பேசிய ஆடியோ வெளியான நிலையிலும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் மற்றும் கொறடா தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடிக்கும் சூழலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது போல் காவேரி-கோதாவரி இணைப்பு திட்டம் உறுதியக நிறைவேற்றம் செய்யும் என்று சொல்லியுள்ளேன்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா பரிசோதனை மையத்தையும் அதிகரிக்க வேண்டும். தொற்று பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். RT PCR பரிசோதனை முடிவு கடந்த ஆட்சி காலத்தில் 24 மணி நேரத்தில் முடிவு தெரிவிக்கப்படும். ஆனால் தற்போது 3 நாட்களுக்கு பிறகு முடிவு தெரிவிப்பதால் தொற்று அதிகாமாக பரவுகிறது. சசிகலா அ.தி.மு.கவிலேயே இல்லை. சசிகலா, தேர்தலின்போதே அரசியலிலிருந்து விலகிவிட்டதாக அறிக்கை கொடுத்துள்ளார். அவர் அ.ம.மு.க நிர்வாகிகளிடம் பேசுகிறார். எனக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சென்னையில் புதுவீட்டுக்கு இடம்பெயர்ந்த காரணத்தால் ஆலோசனையில் பங்கேற்கவில்லை’ என்று தெரிவித்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: