சுதந்திரத்திற்கு பின் உலகம் போற்றிய பிரதமர் மோடி மட்டுமே - எடப்பாடி பழனிசாமி

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேனியில் நடந்து வரும் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

news18
Updated: April 13, 2019, 12:07 PM IST
சுதந்திரத்திற்கு பின் உலகம் போற்றிய பிரதமர் மோடி மட்டுமே - எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
news18
Updated: April 13, 2019, 12:07 PM IST
தேனியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “130 கோடி மக்களை காக்கக்கூடிய வலிமையான பிரதமர் மோடி” என்று கூறினார்.தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேனியில் நடந்து வரும் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.


பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சுதந்திரத்திற்கு பிறகு உலகமே போற்றிய பிரதமர் நரேந்திர மோடி மட்டும் தான்.  130 கோடி மக்களை காக்கக்கூடிய வலிமையான பிரதமர் மோடி.


ஸ்டாலினை தவிர வேறு யாரும், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. தலையில்லாத உடம்பு போன்று காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது.


நமது கூட்டணி மட்டுமே பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி உள்ளது . நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று நாடே எதிர்பார்க்கிறது.” என்று தெரிவித்தார்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...