சென்னை தலைமை செயலக வளாகத்தில் எதிர்கட்சித் தலைவரும்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான
எடப்பாடி பழனிசாமி தன்னுடைய கார் என நினைத்து உதயநிதி
ஸ்டாலின் காரில் ஏற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, பேரவையிலிருந்து வெளியே வந்த போது செய்தியாளர்கள் அவரிடம் சில கேள்விகளை எழுப்பினர்.
செய்தியாளர்களுக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்ற எடப்பாடி பழனிசாமி அவசரத்தில் தன்னுடைய கார் என நினைத்து அங்கு நின்றிருந்த சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்றார்.
Must Read : சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே வெடித்த மோதல்.. ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் அரிவாளுடன் ஏறியும் இளைஞர்கள் அட்டூழியம்
அதன்பிறகு அவருடைய பாதுகாவலர்கள் அறிவுறுத்தலுக்கு பிறகு. ‘சாரி’ எனக் கூறிவிட்டு தனது காரில் ஏறி சென்றனார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.