ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக ஆட்சியை விமர்சிக்க பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி வேண்டும் : எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

அதிமுக ஆட்சியை விமர்சிக்க பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி வேண்டும் : எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியை விமர்சிக்க தகுதி வேண்டும். குடும்ப ஆட்சி நடத்தும் ஸ்டாலினுக்கு எந்தவித தகுதியும் இல்லை என கோவையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சி என்றும், அதிமுகவை பற்றி அவதூறாக பேசுவதை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக அரசை கண்டித்தும், குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் கோவை சிவானந்தா காலனி பகுதியில், அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை திமுக அரசு ஒவ்வொன்றாக கைவிட்டு வருகிறது என்றும், மக்களுக்காக புதிய திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்துள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார்.

ஒரு ஆட்சி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு திமுகவின் ஆட்சி உதாரணமாக உள்ளது. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. ஸ்டாலின் பொம்மை முதல்வராக உள்ளார். எனவே அதிமுக குறித்து அவதூறு பரப்புவதை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறிய அவர், 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்றும் தெரிவித்தார்.

53 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தொழிற்சாலைகள் முடங்கியுள்ளதால் தொழில் வளமும் பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறினார்.

மின்கட்டண உயர்வால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் நடந்து வருவது குடும்ப ஆட்சி என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

First published:

Tags: CM MK Stalin, EPS