Home /News /tamil-nadu /

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு.. துணைப்பொதுச்செயலராகிறார் கே.பி.முனுசாமி..

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு.. துணைப்பொதுச்செயலராகிறார் கே.பி.முனுசாமி..

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

AIADMK General council meeting : அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்ளித்தது. அதன்படி, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு, கட்சியின் சட்ட விதிமுறைகளை பின்பற்றி பொதுக்குழு கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும், விதிகள் மீறப்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தற்போது இல்லை என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் தொட்ட நிலையில், அதன்படி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    அதிமுகவில் அமைப்பு ரீதியிலாக 75 மாவட்டங்கள் உள்ளன. அதில், எடப்பாடி பழனிசாமியே ஒற்றை தலைமையை ஏற்க வேண்டும் என 70 பேர் ஆதரவு குரல் கொடுதிருந்த நிலையில், இன்றைய கூட்டம் தொடங்கியதும், அதிமுக அவைத்தலைவர் பொதுக்குழுவிற்கு தலைமையேற்க இபிஎஸ் முன்மொழிந்தார்.

    அதனைத் தொடர்ந்து, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    Must Read : அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ்... போராட்டம்.. கலவரம்.. போர்க்களமான அதிமுக தலைமையகம்..

    மேலும், 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்கவும், தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    அதிமுக பொதுச்செயலாளராக போட்டியிட குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அதிமுகவில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.. முன்னதாக 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது

    துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி:

    அதே போல, அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பதிலாக துணைப்பொதுச்செயலாளர் பதவி உருவாக்கம் செய்யப்படுகிறது. கே.பி.முனுசாமியை துணைப்பொதுச்செயலாளராக தேர்வு செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

     
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Edappadi Palaniswami, EPS

    அடுத்த செய்தி